Breaking News LIVE: ஜாமினில் வெளியே வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE
Background
- மணலி துணை மின் நிலையத்தில் தீ விபத்து; சென்னையின் பல இடங்களில் மின் விநியோகம் பாதிப்பு – மக்கள் கடும் அவதி
- தமிழ்நாட்டிற்கு போதுமான அளவு தண்ணீரை திறந்து விடக்கோரி கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
- மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
- சீதாராம் யெச்சூரி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட உள்ளது
- பெண் மருத்துவர் கொலை வழக்கில் நீதி கிடைப்பதற்காக முதலமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்யத் தயார் – மம்தா பானர்ஜி
- பெண் மருத்துவரின் கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்கள் – போராட்டம் ஓயாது என அறிவிப்பு
- மம்தா பானர்ஜி தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மாட்டேன் – மே.வங்க ஆளுநர் சபதம்
- விமான சேவையை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக்குவது அவசியம் – பிரதமர் மோடி
- மணிப்பூர் மாநில கலவரம் – இதுவரை 225 பேர் உயிரிழப்பு
- மதுரையில் மகளிர் விடுதியில் தீ விபத்து; 2 பெண்கள் உயிரிழப்பு – உரிமையாளர் கைது
- ஜி.எஸ்.டி. வரி குறித்த கருத்து; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார் உணவக உரிமையாளர்
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை உச்சவரம்பு ரூபாய் 25 லட்சமாக அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியா மருத்துவமனையில் அனுமதி
- ஒடிசாவில் குறுகிய தூர ஏவுகணை சோதனை முயற்சி வெற்றி
- ஓணம் பண்டிகை சென்னையில் இருந்து இன்று சிறப்பு ரயில்கள்
- இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு
- கெஜ்ரிவால் ஜாமின் வழக்கு – உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- நாட்டின் தலைநகர் டெல்லியில் பரவலாக மழை
- அ.தி.மு.க.வில் இருந்து விலகிய மைத்ரேயன் பா.ஜ.க.வில் இருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார்
- தமிழ்நாட்டில் நாளை குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வு
ஜாமினில் வெளியே வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
ஜாமினில் வெளியே வந்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!
சோணை கருப்பசாமி திருக்கோயிலில் குவிந்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர் பக்தர்கள்
மதுரை, திருமங்கலம் அருகே பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த திரளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சோணை கருப்பசாமி திருக்கோயிலில், சேவல், ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடனை பக்தர்கள் நிறைவேற்றி வழிபட்டனர்
Breaking News LIVE:கேள்வி எழுப்பிய அன்னபூர்ணா நிறுவனர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் - எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம்
ஸ்வீட். கார உணவு வகைகளுக்கு வெவ்வேறு மாதிரியான ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுவது குறித்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஸ்ரீ அன்னப்பூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் கேள்வி எழுப்பினார்.
இதை தொடர்ந்து நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் இருவருடன் அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆனது.
இதற்கு கடும் கண்டங்கள் எழுந்து வரும் நிலையில், எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,” அன்னப்பூர்ணா உணவகம் மாதிரியான சிறு குறு தொழில் செய்யும் உரிமையாளர்கள் எளிதான ஜி.எஸ்.டி. வரி ரெஜிம் எதிர்பாக்கின்றனர். அது அவமரியாதை செய்யப்படுள்ளது. இதுவே பில்லியனர்கள்/ பணக்காரர்கள் சட்டத்தை மாற்ற சொல்லும்போதும், தேசத்தின் சொத்துக்களை கைப்பற்றும்போதும், மோடிஜி சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார். சிறு, குறு தொழிலாளர்கள் சில விசய்ங்கள் குறித்து பேசும்போது அது கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறது.”என்று குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.
Breaking News LIVE: நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படம் குறித்த அப்டேட்!
5 mani-ku sandhippom nanba nanbi 🤝🏻
— KVN Productions (@KvnProductions) September 13, 2024
We are happy to announce that our first Tamil film is …………#KVN5update Today at 5 PM 🔥 pic.twitter.com/XU3UIO9TId
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படத்தின் அப்டேட் இன்று (13.09.2024) மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக KPN தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Breaking News LIVE: சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்
அமலாக்கத்துறை வழக்கை தொடர்ந்து சிபிஐ வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. வழக்கு குறித்து வெளியில் பேசக்கூடாது எனவும் ரூ.10 லட்சம் பிணை தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உள்ளது.