மேலும் அறிய

TN Breakfast Scheme: காலை உணவு திட்டம் : அரசு உதவிபெறும் பள்ளிகளில் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

Breakfast Scheme: காலை உணவு திட்டத்தை இன்று முதல் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Breakfast Scheme: காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்வதன் மூலம், கூடுதலாக 2.23 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் காலை உணவு திட்டம்:

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், காலையில் உணவளிக்கும் திட்டத்தை, முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.  இந்நிலையில் அந்த திட்டத்தை விரிவிபடுத்தி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் காலை உணவளிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்படது. அதன்படி, ”முதல்வர் காலை உணவு திட்டம்” இன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்:

திட்ட விரிவாக்கத்தின் மூலம் புதியதாக, அரசு உதவி பெறும் 3,995 அரசு உதவி பெறும் தொடக்க பள்ளிகளில், முதல்வர் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மேலும் 2.23 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.  அப்போது மாணவர்கள் உடன் அருந்தி உணவு உண்டதோடு, அருகில் இருந்த சிறுமிக்கு உணவை ஊட்டி மகிழ்ந்தார். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகள் அனைத்திலும், முதல்வர் காலை உணவு திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

அதிகரிக்கும் வருகை பதிவு:

முதல்வர் காலை உணவு திட்டம் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் அமல்படுத்தியதன் மூலம்,  1.14 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் 25ம் தேதி, திருக்குவளையில் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளிலும் நடமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக,  18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றனர். ‘காலை உணவு’ திட்டத்த்தால் மாணவர்களின் பள்ளி வருகை என்பது கணிசமாக உயர்ந்து வருகின்றது. அதன்படி, இந்த திட்டத்தை தெலங்கானாவிலும், கனடாவில் ‘தேசிய உணவு திட்டம்’ என்ற பெயரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு திட்டம் என கூறப்படுகுறது. மாணவர்களின் வருகைப்பதிவை அதிகரிப்பதோடு, இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பல இடங்களில் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mallikharjun Kharge : ”என்ன கேள்வி கேட்குறீங்க தமிழ்நாட்ல கேட்க முடியுமா?” கடுப்பாகி திட்டிய கார்கேMK Stalin thank Rahul gandhi : ”என் தம்பி ராகுல்” நன்றி சொன்ன ஸ்டாலின்! காரணம் என்ன?Hospitalized P Suseela : தீவிர சிகிச்சையில் பி.சுசீலா..தற்போதைய நிலை என்ன? மருத்துவமனை REPORT!Varunkumar IPS | கட்டம் கட்டிய வருண் IPS.. கைதாகிறாரா சீமான்.? முற்றும் மோதல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 19: துலாமுக்கு சந்தோஷங்கள் பெருகும்; விருச்சிகத்துக்கு பதவி: உங்கள் ராசிக்கான பலன்?
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
Shivdas Meena: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்..!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
"இந்தியாவின் டைட்டன் கருணாநிதி" புகழ்ந்து தள்ளிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
ஆவணி மாத பௌர்ணமி; திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்ன?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்.. உடல்நிலை எப்படி இருக்கு?
"UPSCக்கு பதில் RSS.. இடஒதுக்கீட்டுக்கு முற்றுப்புள்ளி" பகீர் கிளப்பும் ராகுல் காந்தி!
Translation Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா? இதோ இலவசப் பயிற்சி- சேர்வது எப்படி?
Translation Training: மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவரா? இதோ இலவசப் பயிற்சி- சேர்வது எப்படி?
Embed widget