Annamalai : அண்ணாமலை சினிமாவில் நடிக்கப்போகிறாரா? நடித்த படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார்?
Annamalai movie: வரக்கூடிய தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாயந்தது என்பதால், கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் என பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அடுத்த வரக்கூடிய தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, ஆகையால் கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தவிர, பிற கட்சிகளுடன் கூட்டணி வைக்க தயார்.
”பாஜக கட்சி மேலே வர முடியவில்லை”
தமிழ்நாட்டில், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய ஆளுமைகள் இருந்ததால், பாஜகவால் எதுவும் செய்ய முடியவில்லை, அவர்களை எதிர்த்து யாராலும் ஆட்சி செய்யவே முடியாத நிலை இருந்த சூழ்நிலையின் காரணமாக பாஜக கட்சி மேலே வர முடியவில்லை.
ஆகையால், மக்களுடன் ஒன்றாக இணையும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருவதாக, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கருத்தியலின் அடிப்படையில் திமுகவுடன் எங்களுக்கு போட்டி இருக்கிறது. மேலும், அதிமுக பிரச்சனை என்பது உட்கட்சி விவகாரம், அதில் பாஜக தலையிடாது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவை அதிமுகவுடன் ஒப்பிடுகையில், அதிமுகதான் பெரிய கட்சி. வரும் நாடாளுமன்ற தேர்தலில், எனக்கு போட்டியிட விருப்பமில்லை, 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை கொண்டு வருவதே என்னுடைய குறிக்கோள்.
ஆடு என்பது விவசாயம்:
மேலும் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று சிலர் என்னை அழைப்பதால் எனக்கு வருத்தமில்லை, ஏனென்றால் ஆடு என்பது விவசாயம்தானே என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அலுவல் மொழி தொடர்பாக கூறியதை, தவறாக புரிந்து விட்டார்கள், தமிழ் மொழியை நிச்சயம் வளர்ப்போம். எப்போதும் நான் முதலில் இந்தியன், அடுத்து தமிழன் மற்றும் அடுத்ததாக எங்கு செல்கிறேனோ அதுவாக இருக்கும்.
எப்போதெல்லாம் திமுக சரிவை நோக்கி பயணிக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் ஹிந்தி எதிர்ப்பு.
— K.Annamalai (@annamalai_k) October 16, 2022
திரு @mkstalin அவர்களே, பொய் பிரசாரங்கள் செய்வதை நிறுத்திவிட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துங்கள். pic.twitter.com/cM8vs6sZCg
மேலும், பல்வேறு கட்சியினரான சீமான், உதயநிதி, அன்புமணி ராமதாஸ், ரவிக்குமார் உள்ளிட்டோரின் மாற்று கருத்துகளை பார்ப்பேன்.
எனக்கு நடிக்க தெரியாது
”சமீபத்தில் நடித்த படம் குறித்து பேசிய அண்ணாமலை, எனக்கு நடிக்க விருப்பம் இல்லை, வற்புறுத்தலின் அடிப்படையில் நடித்தேன். ஊதியமாக, ரூபாய் ஒன்றுதான் வாங்கினேன். எனக்கு நடிக்க தெரியாது, சினிமாவுக்கு வர மாட்டேன்” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்