மேலும் அறிய
Advertisement
‛கீழ்த்தரமான அரசியல் அரங்கேற்றம்....’ கொதித்து எழும் பாஜக தலைவர் அண்ணாமலை!
அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்.
சென்னையில் கனமழை தொடங்கியது முதல், வெள்ளம் வடிந்ததோ இல்லையோ.. அரசியல் கட்சிகளின் அறிக்கை போர் இன்னும் வற்றாமல் வந்து கொண்டிருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளத்தில் போட்டோ ஷூட் எடுத்தது, அதை திமுகவினர் வைரல் ஆக்கியது. முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஷாப் போட்டோ பதிவிட்டது. அதை பாஜகவினர் கண்டுபிடித்து ட்ரோல் செய்தது என, அடுத்தடுத்து குற்றங்களும், குறைகளும் மாறி மாறி அம்பலப்பட்டு வருகிறது.
மக்களுக்கு பெரிய அளவில் குழப்பம் இல்லாமல், அவர்களே மாறி மாறி குறைகளை கண்டுபிடித்து கூறுவதால் உண்மை நிலையை ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் தற்போது முதல்வர் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட செல்லும் இடங்களில், குறைகளை கூற வரும் மக்கள், கயிறு கட்டி தடுக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு வருகிறது. அதை போட்டோ ஆதாரத்துடன் வெளியிட்டு, கடுமையான அறிக்கையால் சாடியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
இதோ அவரது காட்டமான பேஸ்புக் பதிவு...
'திராவிட வளர்ச்சித் திட்டம்' என்ற பொய்யான பிம்பத்தை ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் தமிழக முதலமைச்சர் அவர்களின் கொளத்தூர் தொகுதியை பார்வையிட வேண்டும்.
முதலமைச்சர் தொகுதிக்குள் வரும்போது பொதுமக்களின் வீட்டிற்கு வெளியே கயிறு கட்டி அவர்களை வெளியே வரவிடாமல் தடுப்பது, Photoshop செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவது என்று கீழ்த்தரமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்.
இதில் கொடுமை என்னவென்றால் அவர் சென்னையின் மேயராக இருந்த பொழுதும், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்த பொழுதும், தற்போது தமிழக முதலமைச்சராகவும் அதே இடங்களில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டுக் கொண்டு இருக்கின்றார்.
அப்படியெனில் அவர் அந்தப் பதவிகளில் இருந்த பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையுமே செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
வெற்று அறிவிப்புகளும் செயல்படுத்தாத வாக்குறுதிகளும் தான் திமுகவின் வளர்ச்சித் திட்டம் போல !
அண்ணாமலையின் இந்த அறிக்கைக்கு எதிர்வினையாற்ற திமுகவினர் தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்னும் சில நாட்களுக்கு கொட்டும் மழையிலும் இணையம் சூடாகவே இருக்கும் எனத்தெரிகிறது.
மேலும் செய்திகள் படிக்க: Watch Video | அழகா.., க்யூட்டா ஒரு டான்ஸ்..! இன்ஸ்டாவை உருக வைத்த பிவி சிந்து..!!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion