அதிசார குரு பெயர்ச்சி 2025 - விருச்சிக ராசி
வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று இஷ்ட தெய்வத்திற்கு தீபம் போட்டு வாருங்கள்

அதிசாரம் என்றால் முன்னோக்கி (or) மிக வேகமாக நகர்வது என்று பொருள்... குறிப்பாக கிரகங்களுக்கு மூன்று விதமான பயணங்கள் உண்டு அது பூமியிலிருந்து நம் பார்க்கும் பார்வையை பொறுத்தது... கிரகங்கள் சீரான வேகத்தில் அவரது நேர்கோட்டில் நகர்ந்து கொண்டு இருப்பார்கள்... பூமியிலிருந்து ஒரு கிரகம் எப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை வைத்துத்தான் தற்பொழுது நான் கிரகங்களின் நகர்வை பற்றி சிறிதாக சொல்கிறேன்...
குரு தற்பொழுது மிதுன ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார்... அது சீரான பயணம்... ஆனால் அந்த குருவே சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட கால அளவில் வரும் பொழுது பின்னோக்கி பயணிப்பது போல் தெரியும்...அதை நாம் ’வக்கிரம்’ என்று கூறுகிறோம்... இதே போல தான் குரு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து... மிதுன ராசியில் தென்படும் குருபகவான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி கடக ராசிக்கு செல்வது போல தெரியப்போகிறது... உண்மையிலேயே அவர் கடக ராசியில் தான் பிரவேசிக்கப் போகிறார்... இப்படி உச்சம் என்ற நிலைக்கு குருபகவான் போகும்பொழுது உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுப்பார் என்ற உண்மையான விவரங்களை தற்போது தெரிந்து கொள்வோம்...
அதிசார குரு பெயர்ச்சி 2025 விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே குரு எட்டில் மறைந்துவிட்டார் என்று பலவிதமான சங்கடங்களில் உங்களைக் கட்டிப் போட்டது போல உணர்ந்து இருப்பீர்கள் சிலர்... இன்னும் பலர் அந்த ஆண்டவனே நம்ப பக்கம் இருக்கார் என்று சொல்லி சிறப்பாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பீர்கள்... எப்படி இருந்தாலும் குரு அதிசாரமாக கடக ராசிக்குள் நுழைகிறார் உங்களுக்கு ஒன்பதாம் பாகம் என்ன ஒரு அற்புதமான இடம் பாருங்கள் ஒரு மனிதருக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் செய்து கொடுப்பவர் தந்தை இப்படியான ஸ்தானம் பெற்ற இடம் பாவகம் 9..... வாழ்க்கையில் என்ன பெரிய தேவை இருந்தாலும் குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமரும் பொழுது அந்த தேவையை பூர்த்தி ஆக்க முயற்சி செய்வார்... எப்படி என்றால் ஒருவேளை உங்களுடைய பிள்ளைகள் படித்து நான்கு பேர் முன்பாக நல்ல ஒரு இடத்திற்கு வர வேண்டும் என்று நினைத்தால் அது தற்பொழுது நடைபெறும் அதே பிள்ளை படித்து முடித்துவிட்டு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் தற்போது அது நடைபெறும் அதே பிள்ளை திருமணத்திற்காக காத்திருந்தார் வரவேண்டும் என்றாலும் அது தற்போது நடைபெறும்... மொத்தமாக குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கக்கூடிய ஒரு பெயர்ச்சியாக இது இருக்கிறது... நீண்ட நாட்கள் ஆகிவிட்டது குடும்பத்தோடு நேரம் செலவிட முடியவில்லை வெளியில் சென்று வர முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு கூட தற்பொழுது இந்த அதிசார குரு பெயர்ச்சி நல்ல மாற்றங்களை பலன்களை கொண்டு வரும்... தொழில் ரீதியாக சில செலவுகள் செய்ய நேர்ந்தாலும் அதற்கான ரிட்டன்ஸ் நல்லபடியாக எதிர்காலத்தில் அமைய வாய்ப்பு இருக்கிறது.... தூர தேசங்களுக்கு செல்ல வேண்டும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கூட இது ஒரு ஏற்றமான காலம்.. தந்தையாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும்... அவரவர் பிறந்த தசா புத்திக்கு ஏற்றார் போல் தான் வாழ்க்கையில் மாற்றங்கள் நடைபெறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை ஆனால் கோச்சாரத்தில் கிரகங்கள் வரும்பொழுது அந்த இடத்திற்கு போல் உங்களுக்கு நல்ல மாற்றங்கள் நிகழ்வதும் சத்தியமான உண்மை...
வெள்ளிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று இஷ்ட தெய்வத்திற்கு தீபம் போட்டு வாருங்கள் ஒன்பதாம் இடத்து அதிபதி நன்றாக வேலை செய்து உங்களுக்கு தேவையானவற்றை உங்களிடம் சேர்ப்பார்....





















