அதிசார குரு பெயர்ச்சி 2025 - கடக ராசி
கடகம் என்பது குருவுக்கு மிகவும் பிடித்த வீடு... நீங்கள் எப்படி தாய் உள்ளம் கொண்டவரோ அப்படியே குருவானவரும் கூட...

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குருவானவர் லக்னத்திலேயே பயணிக்கப் போகிறார் அப்படி என்றால் உங்கள் வீட்டிலேயே உச்சத்தில் பயணம் செய்யப் போகிறார்.... கடகம் என்பது குருவுக்கு மிகவும் பிடித்த வீடு... நீங்கள் எப்படி தாய் உள்ளம் கொண்டவரோ அப்படியே குருவானவரும் கூட... தர்மத்தின் பக்கம் நின்று போராடுபவர்... அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என்று தாய் பாசத்தோடு நினைப்பவர்... அதனால் தான் 12 கட்டங்களில் உங்களுடைய ராசியில் மட்டும் குருவானவர் உச்சம் பெறுகிறார்...
சரி கடக ராசிக்கு இதனால் வரை 12 ஆம் வீட்டில் பயணித்த குரு பகவான் ஒன்றாம் வீட்டில் உங்கள் ராசியில் பயணிக்கும் பொழுது முதலில் உங்களிடம் இருக்கின்ற மிகப்பெரிய கடன் சுமைகளை அடக்க முயற்சி செய்வார்... வியாபாரத்திற்காக வீடு கட்ட வேண்டும் என்றோ தொழில் தொடங்க வேண்டும் என்றோ கடனை கேட்டால் வங்கியினர் உங்களுக்கு கடன் கொடுக்க தயாராக இருப்பார்கள்... தந்தையாரின் பாசமும் பரிவும் உங்களை ஆசீர்வாதத்தோடு ஏற்றுக் கொள்ளுகின்ற காலம்.... தந்தையாரின் சொத்துக்கள் உங்களுக்கு வருவதற்கான ஏற்ற காலமும் கூட...
கோவில்களுக்கு சென்று சாமியை தரிசனம் செய்த காலம் போய் உங்கள் வீட்டிலேயே பூஜையறையை அமைத்து சாமியை கும்பிடுவதற்கான காலமாக அமையப் போகிறது... உங்களுக்கு பிடித்த குருமார்களை நீங்கள் வணங்கி மகிழ்ந்தால் நீண்ட நாட்களாக உங்களை பிடித்திருந்த பிணிகள் விலகும்.... மருத்துவத்தின் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும்... பிள்ளைகள் வழியில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்... ஏற்கனவே வரவு செலவு கணக்குகள் சரியாக இருந்தது அல்லவா தற்பொழுது வரவு அதிகமாகும் செலவு குறையும்.... உற்றார் உறவினர்களோடு நல்ல மகிழ்ச்சிகரமான பொழுதை கழிப்பதற்கான காலம் இது.... நீங்கள் யாரென்று தெரியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் உங்களை ஏளனமாக பேசினார்கள் அல்லவா? அதுபோன்ற நிலைமை மாறி உங்களை அனைவரும் புகழும் காலம் வந்துவிட்டது... நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக கிடப்பவர்கள் கூட எழுந்து துள்ளி குதித்து ஓடுகின்ற சமயம் தான் வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதிக்கு பிறகு நிகழும் அதிசார குரு பெயர்ச்சியின் தன்மை.... கலை துறையினரே உங்களுக்கான சிறப்பான காலகட்டம் இது... முயற்சி செய்யுங்கள் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப் போகிறது... திடீர் செலவுகளால் திக்கு முக்காடி போன உங்களுடைய வாழ்க்கையில் ஏற்றமான பலன்களை கொடுக்க வந்துவிட்டார் குரு பகவான்....
நீண்ட நாட்களாக பிள்ளைகள் இல்லை என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த கடக ராசி அன்பர்களுக்கு பிள்ளை பாக்கியம் உருவாக போகிறது... ஒருவேளை மருத்துவத்தின் மூலம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று இருப்பவர்களுக்கு கூட இது ஒரு சிறந்த காலமும் தான்... ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் பூர்வீக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்... தாயாரின் குடும்பத்தோடு சுற்றுலா சென்று வர ஏதுவான காலகட்டமாக அமையும்.... நினைத்த காரியத்தை எளிதில் நடத்திட ஓம் ஸ்ரீ குருவே நமஹ என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வாருங்கள்.... அருகில் உள்ள சித்தர் கோவிலுக்கு சென்று சித்தரை வழிபடுங்கள்... சாய்பாபா வழிபாடு மேற்கொள்பவர்களும் சிறப்பாக மேற்கொள்ளலாம்.... நவகிரகத்தில் இருக்கும் குருவை வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் வீட்டில் செல்வம் பெருகும்... வாழ்க வளமுடன்....





















