(Source: ECI/ABP News/ABP Majha)
வீதிக்கு வந்து போராடிய மக்கள்.... தனி ஒரு ஆளாய் பிரச்னையை பேசி சரி செய்து அசத்திய எஸ்.ஐ.
கரூர் மாநகராட்சி நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலையை மறித்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் ! வீதிக்கு வந்து போராடிய மக்கள் !! பஞ்சாயத்து நிர்வாகமும் கண்டுக்கல ! மாநகராட்சி நிர்வாகமும் கண்டுக்கல !! தனி ஒரு ஆளாய் பிரச்சனைகளை பேசி சரி செய்து அசத்திய கரூர் மாநகர காவல் துறை உதவி ஆய்வாளர்.
கரூர் சின்ன ஆண்டாங்கோயில் சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனியில் திடீரென்று பெய்த கனமழையால் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே பகுதியில் நிகழ்ந்த இதே போன்ற சம்பவம் மீண்டும் மழை பெய்யும் போதெல்லாம் தற்போது எழுவதாக கூறியும், ஆண்டாங்க் கோயில் மேற்கு பஞ்சாயத்து நிர்வாகமும், கரூர் மாநகராட்சி நிர்வாகமும் மக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு யாரேனும் நல்லது செய்ய வர மாட்டார்களா என்று கருதி திடீரென்று அந்தப் பகுதியின் சாலையை மறித்து, திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மழை பெய்யும் போதெல்லாம் வீடுகளுக்குள் தண்ணீர் வருவதாகவும், அந்த மழைநீர் செல்ல வழி இல்லாமல், வாய்க்காலை ஆக்கிரமித்தும், பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே தேங்கி வடிகால் வழியாதவாறு, சில பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் அப்படியே வீட்டிற்குள் வருவதாக கூறி தங்களுக்கு நீதி வேண்டும் என்று கருதி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ள, பஞ்சாயத்து நிர்வாகம், வருவாய்த்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் யாரும் வராத நிலையில் கரூர் மாநகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீரென, சம்பவ இடத்திற்கு விரைந்து, தங்களது பிரச்சினைகளை, உடனே மேல்மட்ட அளவில் தீர்ப்பதாக கூறியதோடு, இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நலனையும் காக்க வேண்டும் ஆகவே சாலை மறியலை தயவு செய்து கைவிடுங்கள் என்று கூறி, சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்ட கார்கள், இருசக்கர வாகனங்கள் ஆகியவைகள் எடுக்கப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.
பின்னர் மற்ற காவலர்களை feet க்கு செல்லுமாறு அறிவுறுத்திய காவல்துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், என்ன பிரச்சனை சொல்லுங்கள் என்று, அதை விரிவாகவும், விளாவாரியாகவும் கேட்டுக் கொண்டார். பின்னர், மழைநீர் செல்லும் இடத்தில் எங்கு அடைக்கப்பட்டுள்ளது. யார் அடைத்தார்கள், வேறு ஏதேனும் காரணம் என்று கூறியதோடு, ஒவ்வொரு வீதியாகவே அவர் மக்களோடு மக்களாக, நடந்தே சென்று, ஒவ்வொன்றாக, கேட்க ஆரம்பித்தார். உடனே அங்கிருந்த பாதிக்கப்பட்ட மக்கள், பஞ்சாயத்து நிர்வாகமும் எங்கள கவனிக்கல, வருவாய் துறையும் எங்கள கவனிக்கல, நீயாவது வந்து எங்க குறைகளை கேட்டயே யப்பா ! நீ நல்லா இருக்கணும் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.
மேலும், காவல்துறை உதவி ஆய்வாளர் ரமேஷ் என்பவரும் சளி, காய்ச்சலோடு, கையில் துண்டோடு, மக்களின் குறைகளை கேட்டு அறிந்த சம்பவம் வியப்பின் குறியீடு ஆகும். இது மட்டுமல்லாமல், மழைநீர் செல்லும் பத்தடி தூரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எல்லை ஆரம்பிக்கும் நிலையில், நகராட்சியாக இருந்த கரூர் மாநகராட்சி ஆக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், பாதிப்பிற்கு உட்பட்ட பகுதியும் மாநகராட்சியில் சேர்க்கப்பட்ட நிலையிலும் மாநகராட்சி நிர்வாகமும் இந்த பிரச்சனையை எதிர்கொள்ளவில்லை என்பது கூடுதல் தகவல் ஆகும்.