Minister kN Nehru: அமைச்சர் நேரு செருப்பு அணிய உதவும் உதவியாளர் - இதுதான் திமுகவின் சமூகநீதியா? பாஜக கேள்வி
Minister kN Nehru: அமைச்சர் கே. என். நேரு காலணி அணிய, உதவியாளர் அவருக்கு உதவிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister kN Nehru: அமைச்சர் கே. என். நேரு தொடர்பான வீடியோவை பகிர்ந்து, இதுதான் திமுகவின் சமூக நீதியா என பாஜகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திமுகவிற்கு பாஜக கேள்வி:
இதுதொடர்பான வீடியோவில், அமைச்சர் கே.என். நேரு வீடு ஒன்றில் இருந்து வெளியே வருகிறார். அப்போது வாசலில் காத்திருந்த உதவியாளர், அமைச்சர் வெளியே வருவதை கண்டதும் அவரை காலணியை கையில் எடுத்தார். பின்பு அதனை அமைச்சரின் பாதத்திற்கு அருகே கொண்டு சென்று வைத்து, அமைச்சர் காலணி அணிய உதவியுள்ளார். அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ள பாஜகவினர், “இவ்ளோதான் திமுகவின் சமூகநீதி, திமுக அமைச்சருக்கு செருப்பெடுத்து போட கூட ஒரு ஆள் வேண்டுமாம்” என சாடி வருகின்றனர்.
இவ்ளோதான் தீம்காவின் சமூகநீதி 👎
— Annapurna Pillai - BJP Tamilnadu (@AnnapurnaPillai) September 10, 2024
திமுக அமைச்சருக்கு செருப்பெடுத்து போட கூட ஒரு ஆள் வேண்டுமாம்.... pic.twitter.com/AAj5Hkk8UP





















