மேலும் அறிய

Erode East By Election: நீடிக்கும் குழப்பம்.. முடக்கப்படுகிறதா இரட்டை இலை சின்னம்? சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுமா அதிமுக?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாளை வேட்பமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் அதிமுக ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தரப்பு இணைந்து வேட்பாளர் அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைதேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம் பிப்ரவரி 27ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து ஈரோடு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக தரப்பில் கூட்டணி கட்சி சார்பாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டது. வேட்பாளர் அறிவித்தது முதல் திமுக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க அதிமுக தரப்பில் பல குழப்பங்கள் இருந்து வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக (எடப்பாடி தரப்பு) வேட்பாளராக, தென்னரசு என்பவரை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர்  மன்றச் செயலாளராக உள்ள, முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைதேர்தலில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பு வேட்பாளராக செந்தில்முருகன் போட்டியிடுவார் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, வேட்பாளர் செந்தில் முருகனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சென்னையில் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். 

வேட்பாளர் அறிவிப்புக்கு பின் பேசிய ஓபிஎஸ், “ பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் எங்களது வேட்பாளரை வாபஸ் பெறுவோம். இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணப்படி இன்று வரை அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் இருக்கிறேன்" என தெரிவித்தார்.

இருதரப்பு அதிமுகவும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதனால் யார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்? யாருக்கு இரட்டை இலை வழங்கப்படும்? அல்லது இரட்டை இலை சின்னம்  முடக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அல்லது இருவரும் இணைந்து ஒரு வேட்பாளரை அறிவிப்பார்களா என்ற குழப்பமும் நீடித்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு  ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி  நடைபெற்ற பொதுக்குழுவின் அடிப்படையில் தங்கள் அணிக்கு தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு மீது பதில் அளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அதிமுகவின் பிரதிநிதி என்ற அடிப்படையில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி தரப்புக்கு ஒதுக்கக்கூடாது. மேலும் இடைக்கால மனுவில் தீர்ப்பு வழங்கினால் அது பொதுக்குழு தொடர்பான தீர்ப்பை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதேசமயம் தேர்தல் ஆணையம் அளித்த பதில் மனுவில், கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது. இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் என தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றத்தில் தேர்தல் விதிகள் அனைத்து நடைமுறைக்கு வந்துவிட்ட நிலையில், அதனால் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை எனவும், அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. 

மேலும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒரு தரப்பை அங்கீகரிக்க முடியாது எனவும்  கூறியது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, கட்சியின் நலனை கருதியும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காகவும் நிபந்தனையை ஏற்பதாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டது. எனவே அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்துப் போட தயார் என கூறப்பட்டது.  உடனே வேட்புமனுவுடன் சமர்பிக்கப்படும் ஏ,பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். 

சமாதான பேச்சுக்கே இடமில்லை என சொன்ன இபிஎஸ் தரப்பிடம், நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இருதரப்பும் ஏன் ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றும், ஒருதரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருவரை பொதுக்குழு சார்பில் கையெழுத்திட அனுமதித்தால் என்ன எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.  மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இதனிடையே ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள்,  பொதுக்குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யுமென்றும், பொதுக்குழுவின் முடிவை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அவைத்தலைவரின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று ஓ.பி.எஸ். – இ.பி.எஸ் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருவரும் ஒன்றிணைந்து முடிவெடுத்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படாது ஆனால் இரு தரப்பும் சமரசம் ஆகவில்லை என்றால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும், மேலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட நேரிடும்.

அதிமுக கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சி வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என அறிவித்த நிலையில், யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பதை இன்று அறிவிக்க உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
Theni : ஒரே ஆண்டில் 394 பேர் பலி.. தேனியில் நடைப்பெற்ற சாலை விபத்துகள் மொத்த விவரம் உள்ளே..
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Vidaamuyarchi: இந்த முறை நம்பலாமா? விடாமுயற்சிக்கு நாள் குறித்த லைகா - எப்போ தெரியுமா?
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Embed widget