மேலும் அறிய
Ration Shop: தீபாவளியை முன்னிட்டு வரும் ஞாயிற்றுகிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.. உணவுத்துறை உத்தரவு
இந்த மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
இந்த மாதம் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் ஐந்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என உணவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் அனைத்து நாட்களிலும் அனைத்து அட்டைதாரர்களுக்கும் அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பல்வேறு குடும்பத்தினர் முன்கூட்டியே அரிசி சர்க்கரை பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்பதால் இருப்பு சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















