மேலும் அறிய
Advertisement
பெற்றோர்கள் தைரியமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்செந்தூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, முதல்வரின் சீரிய முயற்சியால் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. மூன்றாவது அலை குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அவர்களின் முடிவுகளின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட முடிவுகளை எடுக்க முடியும். மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களை கேட்ட பிறகு, அனைத்தையும் கருத்தில் கொண்டே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தைரியமாக பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion