மேலும் அறிய

Apply For Govt Arts & Science Colleges :அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.... எப்படி விண்ணப்பிக்கலாம்? கட்டணம் என்ன?

 தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பொறியியல் படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கிறது. மாணவர்கள் http://www.tngasa.in/ என்ற இணையதளம்  வாயிலாக, வரும் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்

கடந்த ஆண்டு ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.50, எஸ்.சி./ எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2 நிர்ணயிக்கப்பட்டது.  நடப்பாண்டில் இந்த முறை மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பக் கட்டணமாக ஒவ்வொரு ஐந்து கல்லூரிகளுக்கும் ரூ.48, பதிவுக் கட்டணமாக ரூ.2 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் வரும்23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். பின்னர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுக்கான (கல்லூரி அளவிலான)  கலந்தாய்வு மே 25 முதல் 29-ம் தேதி வரை நடத்தப்படும்.

முதற்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9ஆம் தேதிவரையும், 2-ஆம்கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20-ஆம் தேதி வரையும் நடைபெறும். சேர்க்கைப் பணிகள் முடிந்து, முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி தொடங்கும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/ CreditCard/ Net Banking மூலம் இணையதள வழியாக செலுத்தலாம். இணைய வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் “The Director, Directorate of Collegiate Education, Chennai – 15” என்ற பெயரில்  இன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 

இணையதள வாயிலாக இன்று முதல் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே 19-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு 1800 425 0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அரசு கலை அறிவியல் கல்லுரிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.  கல்லூரி படிப்புதான் பெரும்பாலும், மாணவர்கள் என்ன துறையில் பணி புரிய போகின்றனர், அல்லது சுய தொழில் தொடங்க போகின்றனர் என்பதை தீர்மாக்கின்றது. எனவே இது மாணவர்களுக்கு ஒரு முக்கயமான கால கட்டம். எனவே மேற்படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்து ஐடியா இல்லாத மாணவர்கள் கல்வியாளர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs PBKS LIVE Score: தட்டுத்தடுமாறும் பஞ்சாப்; பவுலிங்கில் கலக்கும் ராஜஸ்தான்!
RR vs PBKS LIVE Score: தட்டுத்தடுமாறும் பஞ்சாப்; பவுலிங்கில் கலக்கும் ராஜஸ்தான்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala : Savukku Shankar appear Trichy court  : ”பெண் காவலர்கள் அடிச்சாங்க” சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுSavukku Shankar appear Trichy court : திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு..ஆஜர் படுத்திய பெண் போலீஸ்..GV Prakash Saindhavi Divorce : ”அத்துமீறி விமர்சிப்பதா?”கொந்தளித்த ஜிவி பிரகாஷ்! விவாகரத்து விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs PBKS LIVE Score: தட்டுத்தடுமாறும் பஞ்சாப்; பவுலிங்கில் கலக்கும் ராஜஸ்தான்!
RR vs PBKS LIVE Score: தட்டுத்தடுமாறும் பஞ்சாப்; பவுலிங்கில் கலக்கும் ராஜஸ்தான்!
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
பெரும் பரபரப்பு! பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு; எங்கு தெரியுமா?
PM Modi:
"நான் முஸ்லீம்கள் பத்தி பேசல.. அவங்கள பத்தி மட்டும்தான் பேசினேன்" பிரதமர் மோடி ஓபன் டாக்!
Travel With ABP: புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5  பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
புதுச்சேரி போனா பாக்க மறந்துடாதீங்க... முக்கிய 5 பெஸ்ட் டூரிஸ்ட் ஸ்பாட்
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
TN Rain: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: கனமழை - மிக கனமழை எச்சரிக்கை
CSK : மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
மாஸாக வந்து இறங்கிய தோனி.. வீடியோ எடுக்காமல் தடுத்த சிஎஸ்கே பாதுகாவலர்களால் பரபரப்பு
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Embed widget