(Source: ECI/ABP News/ABP Majha)
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு.. ஈபிஎஸ்ஸுக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு!
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ஊழல் செய்திருப்பதாக கூறி அதனை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த 2018ல் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற ஆணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம், மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பளிக்க ஆணையிட்டது.
அதன்படி, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து ஜூலை 18ல் நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சி மாறியதற்காக, இந்த வழக்கை மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கத் தேவையில்லை என்றும் கூறி ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கழித்து லஞ்ச ஒழிப்புத்துறை ஈபிஎஸ்ஸுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.