மேலும் அறிய

பகுதி நேர ஆசிரியர்களுக்கு துரோகம்; திமுகவின் துரோகங்களுக்கு தண்டனை உறுதி - அன்புமணி

தமிழ்நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளாது: திமுக ஆட்சி மீண்டும் வராது - திமுகவின் துரோகங்களுக்கு தண்டனை உறுதி!

புதிய அரசு அமைந்த பிறகு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 13 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க முடியாது என்றும், பிற அரசு பணிகளில் சேர அவர்கள் விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். பகுதிநேர சிறப்பாசியர்களை ஏமாற்றுவதற்கான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என்பது திமுக பிராண்டு ஏமாற்று வேலை ஆகும். பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் சுமார் 12,500 பேரில் பெரும்பான்மையினர் 45 வயதைக் கடந்தவர்கள் ஆவர். அவர்களில் கணிசமானவர்கள் பிற அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான வயது வரம்பைக் கடந்து விட்டவர்கள். அவர்களால் சிறப்பாசிரியர் பணிக்கு மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், கடந்த பல பத்தாண்டுகளாக சிறப்பாசிரியர் பணிக்கு நிரந்தர ஆசிரியர்கள் தேர்ந்தடுக்கப்படவே இல்லை. அவ்வாறு இருக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்குவதால் எந்த பயனும் இல்லை. பகுதி நேர சிறப்பாசியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்த போது போராடியது திமுக அரசு.

ஆட்சிக்கு வந்தால் பணிநிலைப்பு செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது திமுக. இப்படி அவர்களை நம்ப வைத்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர் ஐந்தாண்டுகளாக அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு, இப்போது பணி நிரந்தரம் வழங்க முடியாது; சிறப்பு மதிப்பெண் தான் வழங்க முடியும் என்பது மிகப்பெரிய துரோகம் ஆகும். இதை பகுதி நேர ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும், மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று சட்டப்பேரவையில் வீரவசனம் பேசியிருக்கிறார். அவர் எந்த அளவுக்கு மாய உலகில் மூழ்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கு இது தான் சான்று ஆகும். தமிழ்நாடு மிகவும் அறிவார்ந்த மாநிலம், தமிழ்நாட்டு மக்கள் மிகவும் அறிவார்ந்தவர்கள். திமுகவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ள மாட்டார்கள். வரும் தேர்தலில் திமுக அரசு அகற்றப்படுவது உறுதி. புதிய அரசு அமைந்த பிறகு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்...மா.கம்யூ. மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தல்
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்...மா.கம்யூ. மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி வலியுறுத்தல்
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
‘பரந்தூர் மக்களை ஏமாற்றுகிறதா தவெக அரசு?
‘பரந்தூர் மக்களை ஏமாற்றுகிறதா தவெக அரசு?" விஜய்க்கு மறந்து போச்சா? - சீமானின் காட்டமான அறிக்கையில் என்ன இருக்கு?

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Jaecoo J5 Hybrid SUV: இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
இதென்னடா டொயோட்டா ஹைரைடருக்கு வந்த சோதனை.! செம மைலேஜ், அம்சங்களுடன் களமிறங்கும் ஜேக்கூ ஹைப்ரிட் SUV
Brezza Facelift: ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்
ஃபுல் சேஃப்டி, அசத்தலான புதிய அம்சங்கள்.! அறிமுகமானது மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்; முழு விவரங்கள்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Embed widget