மேலும் அறிய

தென் மாநிலங்களின் தண்ணீர் பஞ்சத்திற்கு முற்றுப்புள்ளி; காவிரி - கோதாவரியை இணைக்க அன்புமணி போட்ட மாஸ் பிளான்

காவிரி - கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டை நடத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

காவிரி - கோதாவரி இணைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம் ஆகிய 3 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் காவிரி & கோதாவரி நதிகள்  இணைப்புத் திட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பப்பட்டிருப்பதும் மகிழ்ச்சியும், மனநிறைவும் அளிக்கிறது. நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதில் தென் மாநில முதலமைச்சர்கள் மூவரிடம் ஏற்பட்டிருக்கும் கருத்தொற்றுமை வரவேற்கத்தக்கது மட்டுமின்றி,  காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள தடைகளை தகர்ப்பதற்கான ஆயுதமும் ஆகும்.

கர்நாடக மாநிலம் கொப்பல் பகுதியில் உள்ள துங்கபத்ரா அணையின் 19ஆம் கதவு கடந்த 2024ஆம் ஆண்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அணையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 33 கதவுகளின் திறப்பு விழா அங்குள்ள முனீராபாத் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாடு நாயுடு, தெலுங்கானத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டவர். இந்த நிகழ்ச்சியிலும், அதற்கு முன்பாக நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்திலும் பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ‘‘காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை மத்திய அரசின் திட்டமாக செயல்படுத்த வேண்டும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆந்திரம், தெலுங்கானம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களும் பயனடையும்’’ என்று கூறியிருக்கிறார். இந்த யோசனைக்கு தெலுங்கானத்தின் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி எதிர்ப்பு தெரிவிக்காதது மட்டுமின்றி, அனைத்து நதிநீர் சிக்கல்களுக்கும் விரைந்து தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்.

 

அதன் தொடர்ச்சியாக துங்கபத்ரா ஆற்று நீர் சிக்கல் தொடர்பாக அதை பகிர்ந்து கொள்ளும் கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானம் ஆகிய மாநிலங்களுக்கிடையே தொடர் பேச்சுகளை நடத்துவது என்றும், அப்பேச்சுகளை மத்திய அரசு ஒருங்கிணைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆற்று நீர் சிக்கல்களை தீர்ப்பதற்கான கருத்தொற்றுமை தென் மாநில முதலமைச்சர்களிடம் ஏற்பட்டிருப்பது மிக முக்கியமான திருப்பம் ஆகும். இதே கருத்தொற்றுமை இல்லாததால் தான் காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. நதி நீர் சிக்கல்களைத் தீர்ப்பது, நதிகளை இணைப்பது ஆகியவற்றுக்கு ஆதரவான சூழல் தென் மாநிலங்களின் முதலமைச்சர்களிடம் ஏற்பட்டுள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.

காவிரி &கோதாவரி இணைப்புத் திட்டம் சாத்தியமற்றது அல்ல. இந்தியாவின் வற்றாத நதிகளில் ஒன்றான மகாநதியிலிருந்து சத்தீஸ்கர், ஒடிசா வழியாக கோதாவரிக்கு 429.60 டிஎம்சி தண்ணீர் கொண்டு வந்து,  அத்துடன் கோதாவரியில் ஏற்கனவே உள்ள உபரி நீரையும் சேர்த்து மொத்தம் 922.48 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதிக்கு கொண்டு செல்லப்படும். கிருஷ்ணா ஆற்றில் இருந்து ஆந்திர மாநிலத்தின் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது போக, மீதமுள்ள 497.23 டிஎம்சி தண்ணீர் பெண்ணாற்றிற்கு திருப்பிவிடப்படும். பெண்ணாற்றிலிருந்து காவிரிக்கு 302.42 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்குவது தான் காவிரி &- கோதாவரி இணைப்புத் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வரைவு திட்ட அறிக்கை 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதமே தயாரிக்கப்பட்டு விட்டது.  இந்த வரைவுத் திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் ஒப்புதல் அளித்தால், வரைவுத் திட்டத்தை இறுதி செய்யப்பட்ட திட்டமாக மாற்றி ரூ.86,962 கோடியில் இத்திட்டத்தை செயல்படுத்துவது தான் மத்திய அரசின் நிலைப்பாடு. ஆனால், தெலுங்கானம் எதிர்ப்பதால் இத்திட்டம் முடங்கிக் கிடக்கிறது.

கோதாவரி &- காவிரி இணைப்புத் திட்டத்தை மகா நதியிலிருந்து தொடங்கினால், இணைப்புப் பணிகளை முடிக்க நீண்ட காலம் ஆகும் என்பதால் கோதாவரியிலிருந்து தொடங்கலாம் என்று மத்திய அரசு கருதுகிறது. கோதாவரி ஆற்றின் உபரி நீர் தெலுங்கானத்தின் எதிர்காலத் தேவைகளுக்கு வேண்டும் என்பதால், அதிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என தெலுங்கானம் உறுதியாகக் கூறிவிட்டது. கோதாவரி ஆற்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 1100 டிஎம்சி உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது. அதன் எதிர்காலத் தேவைகளை கணக்கிட்டுத் தான் கோதாவரி&-காவிரி இணைப்புத் திட்டத்திற்காக 493 டிஎம்சி நீரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் தெலுங்கானாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதால் கர்நாடகத்திற்கு நன்மை தான் என்பதால்,  அம்மாநிலம் இத்திட்டத்தை எதிர்க்காது. ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை ஆதரித்திருப்பது மட்டுமின்றி, அதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் குரல் கொடுத்துள்ளார். மகாநதி & கோதாவரி இணைப்புக்காகத் தான் மராட்டியம், சத்தீஸ்கர், ஒதிஷா ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் தேவை. இந்த இணைப்புக்கு அந்த மாநிலங்களும் பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த தெலுங்கானத்தின்  ஒப்புதல் மட்டுமே தேவை.

கோதாவரி &- காவிரி இணைப்பை ஒருங்கிணைக்கும் பணி தேசிய நீர் மேம்பாட்டு முகமை என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முகமைக்கு ஏராளமான பிற பணிகள் இருப்பதால், இப்பணியை திறம்பட மேற்கொள்ள இயலாது. எனவே, இந்தப் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த சிறப்பு பணிக்குழுவை அமைக்க வேண்டும். அத்துடன் இந்தத் திட்டத்துடன் சம்பந்தப்பட்ட மாநில முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தவும், அதைத் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து காவிரி & கோதாவரி இணைப்பு பணிகளை தொடங்கவும் மத்திய அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு பறந்த அவசர உத்தரவு!
நடிகர் தனுஷின் திடீர் அரசியல் நகர்வு! பின்னணியில் நடப்பது என்ன? உளவுத்துறைக்கு அவசர உத்தரவு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
போதைப்பொருள் கும்பலுக்கு பேரதிர்ச்சி! முதல்வர் அதிரடி ஆக்ஷன் – தமிழ்நாடே அதிரும் 65 சிறப்பு படைகள் அமைப்பு!
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget