சிங்கிள் சார்ஜில் 500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் மாருதி 7 சீட்டர் எலக்ட்ரிக் எம்பிவி விலை என்ன?
Published by: ராஜேஷ். எஸ்
மாருதி சுசுகி நாட்டிலேயே முதல் முழு எலெக்ட்ரிக் 7 சீட்டர் எம்பிவி மாடலை YMC என்ற குறியீட்டுப் பெயருடன் தயாரித்து வருகிறது.
இந்த புதிய 7 சீட்டர் EV மாருதி சுசுகி இ விட்டாராவில் பயன்படுத்தப்பட்ட ஹார்டெக்ட் இ பிரத்யேக EV பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு வருகிறது.
காரின் உள்ளே நல்ல கேபின் இடத்தையும் லெக்ரூமையும் வழங்குகிறது. மாருதி இரண்டு பேட்டரி விருப்பங்களை வழங்கும்.
ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த காரின் சிறிய பேட்டரி மாடல் சுமார் 400 கிமீ தூரம் செல்லும். அதேசமயம் 61 kWh பேட்டரி கொண்ட டாப் வேரியன்ட் 500 கிமீக்கு மேல் தூரம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிரீமியம் குடும்ப எலக்ட்ரிக் MPV எக்ஸ் ஷோரூம் விலை ரூ.14 லட்சம் முதல் 18 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஆன்ரோடு விலை ரூ.16 லட்சம் முதல் 21 லட்சம் வரை இருக்கலாம்.
இந்த ஃபேமிலி EVயில் DC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும். வெறும் 45 நிமிடங்களுக்குள்ளேயே பேட்டரியை 10 முதல் 80 வரை சார்ஜ் செய்து கொள்ளலாம்.
இந்த மாருதி 7 சீட்டர் EV BYD eMax 7 விரைவில் வரவிருக்கும் கியா கேரன்ஸ் EV உடன் நேரடியாக போட்டியிடும்.
இந்த மாருதி YMC எலெக்ட்ரிக் எம்பிவி ஒருவேளை இந்த ஆண்டின் கடைசி காலாண்டில் அல்லது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்புள்ளது.