மேலும் அறிய

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்

தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆளுநருக்கு பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில்  உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
ஆன்லைன் ரம்மி விவகாரம்
ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது. முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு பிரச்சனை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த நான்கைந்து ஆண்டுகளில் , எங்களுக்கு தெரிந்து 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர் இருக்கலாம். இந்த 15 மாதத்தில் மற்றும் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
இரண்டாவது விமான நிலையம் அவசியம் ஆனால்..
 
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி, தமிழக அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது.  இது தொடர்பாக பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்கள் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது, எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம் .ஆனால் அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை . திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான,  5000-கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது, என்பதால் அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியும், அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு உயிரிழப்புகளா..? - அன்புமணி ராமதாஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்
 
 
போதையில் சிக்கிய தமிழ்நாடு
 
தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிக அளவு இளைஞர்கள்  பாதிப்படைந்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் போதை பொருட்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு  10 நாட்கள் வேலை செய்தார்கள்.  ஆனால் மீண்டும் போதை பொருள் விற்பனை நடைபெற்று தான் வருகிறது. முதலமைச்சர் இதுகுறித்து மாதம் கூட்டம் நடத்தி, காவல்துறை அதிகாரிகள் கண்டித்துடன் இருக்க உத்தரவிட வேண்டும். போதை பொருள் விற்பனை நடைபெற்றால், அந்த பகுதியில் இருக்கும் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கூட தயங்க கூடாது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா, ஐரோப்பா போட்ட நாடுகளை விட மிக மோசமான நிலைக்கு சென்று விடும்.
 
காலநிலை மாற்றம் அச்சம்
 
100 வருடங்கள், 150 வருடங்கள் கழித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை நாம் பார்ப்போம் என நினைத்திருந்தோம். ஆனால் தற்பொழுதே, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை பார்க்கத் துவங்கி உள்ளோம். சமீபத்தில் கூட மயிலாடுதுறை மாவட்டத்தில்  120 வருடங்கள், இல்லாத மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. ஒரே நாளில் அதிக அளவு மழை பெய்ததால் அந்த மாவட்டமே வெள்ளக் காடாகி உள்ளது. தமிழக அரசு நீர் மேலாண்மையில் முதலீடு செய்ய வேண்டும், 5 வருடங்களில் 1 லட்சம் கோடி முதலீடு செய்து , நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சென்னையை சுற்றி 10 ஏரிகளை புதியதாக உருவாக்க வேண்டும்” எனப் பேசினார்.

தலைப்பு செய்திகள்

கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கள்ளுக்கான தடையை மறு ஆய்வு செய்ய கோரி மனு.. உள்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு !
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!
சிவப்பு பட்டு, சாமந்தி பூ அலங்காரத்தில் தேவி! காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் தங்கத் தேர் உற்சவம் - முழு விவரம்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget