மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 555 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 544 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 648 கன அடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 71.12 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 33.66 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது குறுவை, சம்பா அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டு, குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர் வரத்து 544 கன அடியில் இருந்து 648 கன அடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 96.68 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 20.32 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 916 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 974 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 13.29 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 180 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது. 

தலைப்பு செய்திகள்

RRB Exam Free Coaching Class : ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
ரயில்வே தேர்வுக்கு இலவச பயிற்சி.! இளைஞர்களுக்கு அசத்தல் சான்ஸ்- தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
கட்டுமானப் பொருட்கள் கடும் விலை உயர்வு; பதுக்கல் காரணமா? அரசு உடனே தலையிட கோரிக்கைConstruction materials prices have skyrocketed; Is hoarding the reason? Request for immediate government intervention
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
LPG Cylinder: இனி 4 சிலிண்டருக்கு தான்..! விலையை ஏற்றி, மானியத்தையும் குறைத்த மத்திய அரசு - காங்., சாடல்
Trump Vs Netanyahu: “உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
“உங்கள தனியா நிக்க வச்சுடுவேன்“ - நெதன்யாகுவுக்கு எச்சரிக்கை; ஈரானுக்காக ‘U‘ டர்ன் அடித்த ட்ரம்ப்
TN By-Election: இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
இடைத்தேர்தலுக்கு ரெடி.. ADMK MLA-க்களுக்கு வாய்ப்பு மறுத்த TVK? சொந்த பாய்ஸிற்கு ஜாக்பாட்..!
Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
US H-1B Visa Fee: ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
ஹேப்பி அண்ணாச்சி.! H-1B விசா கட்டணம் ரத்து; ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த அமெரிக்க நீதிமன்றம்
John Britto: விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
விஷயம் தெரியாமல் வாய்விட்ட (அ)திமுகவினர்? ஜான் பிரிட்டோ பெயரால் வந்த குழப்பம் - எல்லாமே பொய்யா?
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
Vairamuthu: ஸ்டாலின் தோல்வி.. கொளத்தூர் மக்களை சாடிய வைரமுத்து.. நன்றியுணர்வு மீது சந்தேகம்!
TN Weather Update: இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
இடி, மின்னல், பலத்த காற்றுடன் 10 மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
Embed widget