அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்; கடும் துர்நாற்றத்தால் மக்கள் அவதி
கரூர் சின்னதாராபுரம் பி. அணைப்பாளையம் ஊராட்சி உள்ளது. 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
கரூர் சின்னதாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் மீன்கள் செத்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள், பள்ளி மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே பி. அணைப்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவையை பூ ர்த்தி செய்து வருகிறது. அந்தப் பகுதியில் அமராவதி ஆற்றில் தடுப்பணையில் தண்ணீர்வற்றியதால் இந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி சிறு குளம் போல் உள்ளது.
இந்தநிலையில் கடந்த ஒரு வாரமாக தடுப்பணையில் உள்ள மீன்கள் தண்ணீரில்செத்து மிதந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் தடுப்பணை அருகே அரசு ஆரம்பப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் அந்த பகுதியில் குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவி விடுமோ? எனவும், தடுப்பணை தண்ணீர் ஆழ்துளை கிணற்றில் கலந்து விடுமோ? என என்ற அச்சத்தில் உள்ளனர். கிணற்றின் மூலம் எடுக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி வரும் பி. அணைப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 6 கிராம பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.