மேலும் அறிய

Mekedatu: "மேகதாது விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செயல்படுவது ஏற்புடையதல்ல" - பெ.சண்முகம்

ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை வரை கார்ப்பரேட்டுகள் வெளியேற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என அகில இந்திய விவசாய சங்க பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன் பேட்டி

காஞ்சிபுரம் :  அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக இந்திய அளவில் 2- நாள் சிறப்பு அகில இந்திய மத்திய செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று  மற்றும் இன்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் அகில இந்திய தலைவர் அசோக் தாவ்லே, அகில இந்திய பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன், அகில இந்திய நிதி செயலாளர் கிருஷ்ண பிரசாத், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் மாநில தலைவர் பெ. சண்முகம், அகில இந்திய துணைச் செயலாளர் டி ரவிந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களும் இருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Mekedatu:
தீர்மானம் 
 
இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மணிப்பூர் கலவரத்திற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி தான் காரணம். கடந்த 9 ஆண்டுகளில், நான்கு லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் இதற்கு முக்கிய காரணம் ஆளும் பிஜேபி தான். லப்பர் தொழிலாளிகளுக்கு உரிய விலையானது நாடு முழுவதும் சரிவர கிடைப்பதில்லை, உரிய விலை கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற நோக்கி செப்டம்பர் 15ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள லப்பர் உற்பத்தி தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேற வேண்டும்  என போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்  . மின்சாரம் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். தமிழ்நாட்டில் கரும்புக்கு உரிய விலை கொடுக்க வேண்டும், உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Mekedatu:
 
ஒரு மாதமாக கலவரம்
 
இதனை அடுத்து , அகில இந்திய பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன் மற்றும் மாநிலத் தலைவர் சண்முகம் ஆகியோர் கூட்டாக செய்தியாளரை சந்தித்தபோது தெரிவித்ததாவது:- மேகதாது பிரச்சனையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தமிழ்நாடு அனுமதி இல்லாமல் எந்த வித கட்டுமானங்களிலும் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அதை மீறி செயல்படுவோம் என கூறுவது ஏற்கத்தக்கதில்லை என தெரிவித்தனர். மல்யுத்த வீரர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இது குறித்து ஆளும் பாஜக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதனை கண்டித்து வருகின்ற ஜூன் 5ஆம் தேதி டெல்லியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்கம் ஈடுபடும் என தெரிவித்தார். மணிப்பூரில் ஒரு மாதமாக கலவரம் நடைபெற்று வருகிறது 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 50 ஆயிரம் மேற்பட்டவர் வீடுகளை இழந்து அகதியாக இருப்பதாகவும் அரசு புள்ளிவிபரங்களே தெரிவிக்கின்றனர். 

Mekedatu:
 
விவசாய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர் 
 
இதற்கு ஆளும் பிஜேபியும் ஆர்.எஸ்.எஸ் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். நெய்வேலி இரண்டாம் சுரங்கம் விரிவாக்கம் தொடர்பாக விவசாயிகள் ஒரு பகுதியினர் நிலம் கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இழப்பீடு முறையாக கொடுக்க வேண்டும். மூன்றாவது சுரங்கம் அமைத்தால் கடலூர் மாவட்டமே இருக்காது. எனவே மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு, தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வருகின்றோம். திரிபுராவில் இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர் என செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார் . மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், கே. நேரு, மாவட்டத் தலைவர் சாரங்கன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சி. சங்கர், நிர்வாகிகள் சுகுமார் மற்றும் செல்வம்,முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
Breaking News LIVE, July 8 : கனமழையால் மூழ்கிய மும்பை - ரயில்கள் ரத்து - கல்வி நிலையங்கள் மூடல்!
Breaking News LIVE, July 8 : கனமழையால் மூழ்கிய மும்பை - ரயில்கள் ரத்து - கல்வி நிலையங்கள் மூடல்!
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
PM Modi Russia Visit: இன்று ரஷ்யா புறப்படுகிறார் பிரதமர் மோடி - புதினுடன் ஆலோசனை: 3 நாட்கள் பயணத் திட்ட விவரம்!
Breaking News LIVE, July 8 : கனமழையால் மூழ்கிய மும்பை - ரயில்கள் ரத்து - கல்வி நிலையங்கள் மூடல்!
Breaking News LIVE, July 8 : கனமழையால் மூழ்கிய மும்பை - ரயில்கள் ரத்து - கல்வி நிலையங்கள் மூடல்!
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
Vikravandi By-Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - இன்றுடன் ஓய்கிறது பரப்புரை, கடைசி நாள் வாக்கு சேகரிப்பில் தலைவர்கள் தீவிரம்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்
Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்
Sarathkumar: இப்ப விட்டாக்கூட மூட்டை தூக்கி பிழைச்சுப்பேன் - சரத்குமார் சொன்னது ஏன் தெரியுமா?
Sarathkumar: இப்ப விட்டாக்கூட மூட்டை தூக்கி பிழைச்சுப்பேன் - சரத்குமார் சொன்னது ஏன் தெரியுமா?
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
TNPL 2024: LKK vs ITT: கடைசி பந்தில் விக்கெட் - ஒரு ரன் வித்தியாசத்தில் திருப்பூரை வீழ்த்திய கோவை!
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு-  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: சிம்மத்துக்கு சுதந்திரம், கன்னிக்கு கனிவு- உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Embed widget