மேலும் அறிய

Senthil Balaji: 'சென்னை வரும் எய்ம்ஸ் மருத்துவர்கள்...' டெல்லி அழைத்துச் செல்லப்படுகிறாரா செந்தில்பாலாஜி?

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலையை கண்காணிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வரவுள்ளதாக் கூறப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி:

அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். சென்னை, கரூரில் உள்ள செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. அதேபோல் தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

நள்ளிரவு வரை கிட்டதட்ட 17 மணி நேரமாக அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜி தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனை வளாகம் முழுவதும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவமனையில் அனுமதி:

செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரால் பேச முடியவில்லை, காது அருகே காயம் போன்று இருப்பதாகவும் மருத்துவமனையில் அவரை பார்க்கச் சென்ற அமைச்சர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, சேகர் பாபு, பொன்முடி, ரகுபதி, அன்பில் மகேஸ், எ.வ.வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் நேரில் மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.

அதேசமயம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து 9 மணியளவில் மருத்துவமனை அறிக்கை வெளியாகும் என சொல்லப்படுகிறது.

டெல்லி அழைத்து செல்லப்படுவாரா?

இந்நிலையில் செந்தில்பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு சென்னை வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஒருவேளை இது உறுதியானால் அவரை டெல்லிக்கு கொண்டு  அமலாக்கத்துறை விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN AssemblyEPS in Assembly : ராகுல் பாணியில் EPS..புது ரூட்டில் அதிமுக! அதிர்ந்த சட்டப்பேரவை : TN Assemblyசு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
HMPV Virus: இந்தியாவில் காலடி வைத்த HMPV வைரஸ்! பெங்களூரில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி..
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
சர்வதேச கோல்டன் க்ளோப் விருதுகள் 2025..விருது வென்றவர்கள் முழு பட்டியல் இதோ
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
TN Assembly Session LIVE: ஆளுநர் உரை புறக்கணிப்பு; ஆர்.என்.ரவியின் செயல் சிறுபிள்ளைத் தனமானது - மு.க.ஸ்டாலின் கண்டனம்
வசூலில்  கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
வசூலில் கலக்கும் டொவினோ தாமஸ் நடித்த IDENTITY..இந்த ஆண்டும் மலையாள சினிமாதான்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Embed widget