மேலும் அறிய

Edappadi Palanisamy: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு..!

கொரோனா விதிமுறைகளை ஆர்ப்பாட்டம் செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்ததாக, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனினிசாமி தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். 

இந்நிலையில், திமுக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கடந்த அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, சேலத்தில் நடைபெற்ற போராட்டாத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இதனால், முன் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா விதிமுறைகளை ஆர்ப்பாட்டம் செய்தது போன்ற பிரிவுகளின் கீழ் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள தனது வீட்டின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபின் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "2021 திமுக தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளதை நிறைவேற்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக சார்பாக சுமார் 505 அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் அதில் முக்கியமான அறிவிப்புகளை கூட செய்வோம் என அவர்கள் உறுதி தரவில்லை.

மக்களிடம் பொய்யான வாக்குறுதியை சொல்லி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது; திமுக சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்; ஸ்டாலின் முதல்வராக தேர்வான உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறினார்கள், ஆனால் தேர்தல் முடிந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட் தொடர்பாக கண் துடைப்புக்கு ஒரு கமிஷனை அமைத்து நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்; ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்யும் கையெழுத்து என்றார்கள்.

கல்விக்கடன் ரத்து குறித்தும், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை அளிப்பதாகவும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள் ஆனால் அதையும் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் அடகுவைத்த நகைக்கடன் குறைக்கப்படும் என்றும், மாதந்தோறும் மின்கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறிய நிலையில் அதையும் செய்யவில்லை. அதிமுக அரசு இருந்தவரை மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், மின்மிகை மாநிலமாகவும் இருந்தது; இன்றைக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது, அதனை சரி செய்ய வேண்டும்.

இப்படி பல வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது சூழலிலே, மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய்வழக்குகளை போட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் தற்போது கொந்தளிப்பாக இருக்கும் இந்த நிலையில் திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்துவது, பொய் வழக்குகளை போடுவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள். அதிமுக என்றும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும், மக்கள் பிரச்னைகளை தீர்க்கும். திமுக ஆட்சியில் இருந்து இறங்கும்போது ஒரு லட்சம் கோடி கடனை வைத்துவிட்டுதான் சென்றார்கள்; கடன் வாங்குவது என்றால், அரசாங்கத்தின் திட்டங்களுக்காகவும், வளர்ச்சி பணிகளுக்காகவுமே வாங்கியுள்ளோம்; முதலீடு செய்வதற்காகவே தமிழ்நாடு அரசு கடன் வாங்கினோம்." என்றார்.

லாட்டரி சீட்டு விவகாரத்தில் தேவையில்லாத குற்றச்சாட்டை நீங்கள் வைத்துள்ளதாக திமுக விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு ”எங்களுக்கு கிடத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி தரவுள்ளதாக அறிக்கைவிட்டுள்ளேன்; இல்லை என்றால் அது நன்றி, ஆனால் தமிழகத்தில் லாட்டரி சீட்டு வந்துவிடக்கூடாது.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஸ்டாலினிடம் நீட் தேர்வு நடக்குமா நடக்காதா என கேள்வி எழுப்பினேன், அப்போது அதற்கு மழுப்பலான பதிலை சொன்னார்கள்; ஆனால் இப்போது மாணவர்களை நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என சொன்னார்கள்.

எங்களுடைய ஆட்சியில்தான் கொரோனா தொற்று இருந்தது, கொரோனா தொற்றை கடுப்படுத்துவதில் சிறந்த அரசாக அதிமுக அரசுதான் இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடியே பாராட்டியுள்ளார். திமுக தேர்தல் அறிக்கையில் ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என திமுக தேர்தல் வாக்குறுதியை கொடுத்துள்ளதே என்ற கேள்விக்கு, இப்போது ஊழல் அமைச்சரைத்தானே ஸ்டாலின் வைத்துள்ளார், அவரை ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே என பதிலளித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget