மேலும் அறிய

AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?

தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராகவே பிரகடனப்படுத்திக்கொள்ளும் சசிகலாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மறைமுகமாக இயங்குவதாக, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு தகவல் கிடைத்திருக்கிறது

’அணிகள் இணைந்தாலும் இன்னும் மனங்கள் இணையவில்லை’ என்று அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் எப்போதோ போட்ட பதிவு, இப்போதும் வானலியில் கொதிக்கும் எண்ணெய் மாதிரி அதிமுகவில் தகித்துக்கொண்டிருக்கிறது.AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?

ஒருபக்கம் இரட்டை தலைமையில் அதிருப்தி அடைந்துள்ள நிர்வாகிகள் பெரும்பாலானோர் அதிமுகவில் மீண்டும் ‘ஒற்றைத் தலைமை’ ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் கவுண்டர் Vs முக்குலத்தோர் என்ற உட்கட்சி சாதிய மோதல் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது.

AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?
வேலுமணி, தங்கமணி

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ் இருந்தாலும் அவருக்கான முக்கியத்துவத்தையும், முடிவு எடுக்கும் அதிகாரத்தையும் வழங்காமல், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி சர்வ வல்லமை படைத்த தலைவராக அதிமுகவில் ஆக நினைப்பது, முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகளையும் முன்னாள் அமைச்சர்களையும் புறக்கணிப்பது போன்ற காரணங்களால், இணைந்த அணிகளிலேயே மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி வருகிறது.

AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?
எடப்பாடி பழனிசாமி

தன்னை இன்னும் அதிமுகவின் பொதுச்செயலாளராகவே பிரகடனப்படுத்திக்கொள்ளும் சசிகலாவுக்கு ஆதரவாக முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மறைமுகமாக இயங்கி வருவதாக, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு கிடைத்த தகவலால், அவர்களை ஓரங்கட்டும் முயற்சியில் இறங்கியிருக்கிறது கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த கொங்கு மண்டல அணி.

AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?
சசிகலா

கொங்கு வேளாள கவுண்டர்கள் மத்தியில் செல்வாக்கான தலைவராக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்துவிட்டதால், சசிகலா மீண்டும் அதிமுகவில் வந்துவிடக்கூடாது என்ற தீர்க்கமான முடிவை கவுண்டர்கள் தரப்பு எடுத்து, அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்தி வருகிறது. ஆனால், தங்கள் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்டு, பல ஆதாயங்களை பெற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவை மட்டும் ஓரங்கட்டியது மட்டுமல்லாமல், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களையும் புறக்கணிக்கும் செயல்களில் ஈடுபடுவதையும், அதிமுகவில் தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட கவுண்டர் சமுதாயத்தினருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும், முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, சசிகலாவை மீண்டும் அதிமுகவிற்கு தலைமையேற்க வேண்டும் இன்னொரு பக்கம் அவர்கள் மறைமுகமாக காய்களை நகர்த்தி வருகின்றனர்.

AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?
வைத்திலிங்கம், ஒபிஎஸ், செல்லூர் ராஜூ

அணிகள் இணைந்த பிறகு தீவிர சசிகலா எதிர்ப்பு அரசியலை கைவிட்டுவிட்ட ஒபிஎஸ், ஒருவேளை சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள துணிந்துவிட்டார் எனில், முக்குலத்தோர் சமுதாய நிர்வாகிகளுடன் சேர்ந்து கவுண்டர்கள் அல்லாத பிற சமூக நிர்வாகிகளும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வரக்கூடும் என கணிக்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?

ஆனால், ஒபிஎஸ்-சை ஓரங்கட்டிவிட்டு, முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக்கும் முயற்சியும் இன்னொரு பக்கம் நடைபெற்று வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ’ஒபிஎஸ் தன்னை நம்பி வந்தவர்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை, தொண்டர்களுக்கும் எதுவும் செய்யவில்லை’ என்று புழுக்கத்தில் இருக்கும் பலர், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முடிவு எடுக்கப்பட்டால் அதனை ஆதரிக்கவும் தயாராக இருக்கின்றனர்.AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?

தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நிக்கியது செல்லாது என சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அந்த வழக்கின் முடிவு சசிகலாவிற்கு ஆதரவாக இருந்தால், ஒபிஎஸ் உள்ளிட்ட பலரும் சசிகலா பக்கம் செல்லத் துணிவர் என்றும், அப்படி அந்த வழக்கின் தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக இருந்தால் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் ஒற்றை தலைமையாக்க அதிமுகவினர் சம்மதிப்பார்கள் என்றும் பல ஆண்டுகளாக அதிமுக அரசியலை உற்றுநோக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.AIADMK: ’கவுண்டர்கள் Vs முக்குலத்தோர்’ அதிமுகவில் தலைதூக்குகிறதா சாதிய அரசியல்..?

சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது, உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட பெரும் பின்னடைவு, யார் எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருவது, யாருக்கு செல்வாக்கு அதிகவும் என்ற அதிகார போட்டி நீடிப்பது, மக்கள் பிரச்னைகளுக்கு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்திற்கே தனித்தனியாக கடிதமும் அறிக்கையும் கொடுப்பது உள்ளிட்டவைகளால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிமுகவில் மீண்டும் ஒற்றைத் தலைமை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையாக ஆகப்போவது சசிகலாவா அல்லது எடப்பாடி கே பழனிசாமியா என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும்..!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget