மேலும் அறிய

சொத்து வரி உயர்வை திரும்ப பெறுக.. தமிழ்நாடு அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சொத்து உயர்வு தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகியவற்றிலுள்ள கட்டடங்களுக்கு சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக எதிர்த்து வருகிறது. இதை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மதுபான விற்பனையாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, பெட்ரோல் - டீசல் விலையாக இருந்தாலும் சரி, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் அகவிலைப்படி உயர்வாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாதபோது ஒரு கொள்கை, ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை என அனைத்திலும் இரட்டை வேடம் போடும் தி.மு.க. தற்போது சொத்து வரியினை அபரிமிதமாக உயர்த்தி வாக்களித்த மக்களின் மீது கூடுதல் கமையினை அளித்துள்ளது. தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் 2018 ஆம் ஆண்டு குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரி உயர்த்தப்பட்டபோது, அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். சொத்து வரி உயர்வுக்கு எதிராக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய கட்சி தி.மு.க.

இந்த சொத்து வரி 2019 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்திலேயே திரும்பப் பெறப்பட்டதோடு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வரி வரும் ஆண்டுகளில் சரிகட்டப்படும். என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கூடுதலாக வருவிக்கப்பட்ட வரி வரும் ஆண்டுகளில் சரிகட்டப்பட்டது. இதனையும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விமர்சித்தார். எதிர்வரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை முன்னிட்டு வரி உயர்வு திரும்பப் பெறப்பட்டு இருக்கிறது என்றும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட சொத்து வரியினை வரும் ஆண்டுகளில் சரிகட்டுவதற்குப் பதிலாக ரொக்கமாக திருப்பி அளிக்க வேண்டுமென்றும் வாதிட்டவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். இவையெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்காக அரங்கேற்றப்பட்ட சுட நாடகங்கள்.

தற்போது, ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள்ளேயே நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சொத்து வரியை அபரிமிதமாக உயர்த்தி தி.மு.க. அரசு உத்தாவிட்டுள்ளது. அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கையின்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 500 மற்றும் அதற்குக் குறைவான சறு அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அ வரையிலான குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும். 1201 முதல் 1800 சதூ அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801-க்கு பேற்பட்ட கொண்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்கள் மற்றும் காலி - மனைகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியோடு 2011 ஆம் ஆண்டு இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இதர மாநகராட்சிகளில் உள்ள 500 சதுர அடிக்கு குறைவாக உள்ள குடியிருப்புகளுக்கு 25 விழுக்காடும், 601 முதல் 1200 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 50 விழுக்காடும், 1201 முதல் 1800 சதுர அடி கொண்ட குடியிருப்புகளுக்கு 75 விழுக்காடும், 1801 சதுர அடிக்கு மேற்பட்ட குடியிருப்புகளுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 75 விழுக்காடும், வணிக நிறுவனங்களுக்கு 100 விழுக்காடும் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வின் மூலம் சொந்த வீடுகள வைத்திருப்போர் மட்டுமல்லாமல் வாடகைக்கு குடியிருப்போரும் பாதிக்கப்படுவர். சொந்தக் கட்டடங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள், அந்தக் கட்டடங்களில் வாடகைக்கு குடியிருக்கும் ஏழை, எளியோரின் வாடகையினை உயர்த்தக்கூடிய நிலை ஏற்படும். இதேபோல், மாத வாடகை அடிப்படையில் கடைகள், தொழிற்சாலைகள். பள்ளிகள். கல்லூரிகள் நடத்துவோரும் கூடுதல் சுமைக்கு ஆளாவதோடு, கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையும், தொழிற்சாகைளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையும், பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டணமும் வெகுவாக உயரும். இது ஒரு விஷச் சூழல் போன்றது. விலைவாசி உயர்விற்கும், பணவீக்கத்திற்கும் வழிவகுக்கக்கூடியது. இதனால் அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவர். கொரேனாவிலிருந்து மீண்டு எழுவதற்குள் மீண்டும் ஒரு இடி மக்கள் மேல் விழுந்திருக்கிறது. இந்த இடியை தாங்கிக் கொள்ளக்கூடிய நிலைமையில் மக்கள் இல்லை. மக்கள் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மக்கள்" வடிக்கும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் ஆயுதமாகிவிடும் என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இந்தத் தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

எனவே, அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கும் சொத்து வரி உயர்வினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில், இதனை எதிர்த்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தினை தமிழ்நாடு முழுவதும் நடத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இறுதித் தேர்வு நிச்சயம் நடத்தப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget