AIADMK : ஆகஸ்ட் 20 ஆம் தேதி இபிஎஸ் தலைமையில் அ.தி.மு.க. மாநாடு - செயற்குழுவில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
AIADMK : சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுரையில் வரும் ஆகஸ்ட- 20 ஆம் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெறும் என்று செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை அதிமுக அலுவலகத்தில் அவைத்தவர் தமிழ் மகன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.70 மாவட்ட செயலாளர்கள் உட்பட 320 பேர் அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதாக கூறி திமுக அரசுக்கு கண்டனம், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட 15 முக்கிய தீர்மானங்கள் இந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்களின் விவரம்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையில் தேர்தல் கூட்டணி
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல்
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் களப்பணி ஆற்றி வெற்றி பெற செயற்குழுவில் நிறைவேற்றம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பிறந்தநாள் கூட்ட நடத்துவதற்கு தி.மு.க. அரசு மறுப்பதாக கூறி செயற்குழு கூட்டத்தில் கண்டனம் நிறைவேற்றப்பட்டது.

தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பூத் கமிட்டி அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
ஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக சார்பில் மதுரையில் பிரம்மாண்ட அதிமுக மாநாடு நடத்துவது.
அதிமுக உறுப்பினர்களை புதுப்பித்தல், புதிய உறுப்பினர்களை சேர்த்தல்.
தமிழ்நாட்டின் கடன் சுமையை அதிகரித்துள்ள திமுக அரசுக்கு கண்டனம்.
அதிமுக வின் ஐடி விங் நிர்வாகிகள் மீது திமுக அரசின் பொய் வழக்கிற்கு கண்டனம்
விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றிற்கு கண்டனம்
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
நடந்தாய் வாழி காவேரி திட்டம் மற்றும் காவேரி-கோதாவரி திட்டம் ஆகியவற்றை நிறைவேற்ற மத்திய அரசுக்கு அழுத்தம்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக-விற்கு வெற்றியை தேடித்தர தொண்டர்களுக்கு அழைப்பு
மேலும் வாசிக்க..





















