OPS Press meet: ”என் தாத்தாவோ இபிஎஸ் தாத்தாவோ ஆரம்பித்த கட்சி இல்ல அதிமுக; கிறுக்கர்களுக்கு பதில் சொல்ல முடியாது”: ஓபிஎஸ் அதிரடி!
தர்மத்தின் வழியில் நின்று மக்களை சந்தித்து நாங்கள் தீர்ப்பு கேட்போம் என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி தலைமையிலான அதிமுக பொதுக்குழு செல்லும் என நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து சென்னையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “கிறுக்கர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க முடியாது. தர்மயுத்தத்திற்கு நல்ல முடிவு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். அதிமுக இபிஎஸ் தாத்தாவும் ஓபிஎஸ் தாத்தாவும் ஆரம்பித்த கட்சி கிடையாது. அவர்கள் நாகரீகம் இல்லாமல் பேசுகிறார்கள். நாங்கள் அப்படி பேச விரும்பவில்லை.
அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டுமே. அதை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை. தர்ம யுத்தத்திற்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம். தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவு இல்லை. தீர்த்துக்குப் பின்னரே தொண்டர்கள் எழுச்சி உடன் இருக்கிறார்கள். தர்மத்தின் வழியில் நின்று மக்களை சந்தித்து நாங்கள் தீர்ப்பு கேட்போம்.” என்று தெரிவித்தார்.