BJP - ADMK : ”பாஜகவிற்கு கொடுக்கும் இடத்தில் அதிமுக இல்லை” : கூட்டணியில் புகைச்சலை கிளப்பும் எஸ்.ஆர்.சேகர்..!
கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அதிமுக வுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி இல்லையேல் தனி கூட்டணி என்று பாஜக நிர்வாகி கூறிவருவது அதிமுகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அதிமுக வுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி இல்லையேல் தனி கூட்டணி என்று பாஜக நிர்வாகி கூறிவருவது அதிமுகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி டெல்ல்லியில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயகுமார் ஆகியோருடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார். அப்போது, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கு குறித்து பேசப்பட்டதாக் கூறப்படுகிறது. இச்சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி , அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்று கூறியிருந்தார்.
எடப்பாடி பழனிசாமி பேட்டி கொடுத்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், 25 சீட்டு கொடுத்தால் தான் கூட்டணி. இல்லையேல் பாஜக தனி கூட்டணி அமைக்கும் என்று பாஜக நிர்வாகி பேசிவருவது அதிமுகவினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாஜக மாநில பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் தனது ஃபேஸ்புக் பதிவில், “பாஜக வாங்கும் இடத்தில் இல்லை; அதிமுகவும் கொடுக்கும் இடத்தில் இல்லை; மத்தியில் ஆளப்போவது மோடி. அதன் பிரதிநிதிகள் தமிழகத்தில் இருந்தாலே தமிழ்நாட்டுக்கு நல்லது. கூட்டணி என்று ஏற்படுமானால் 25 சீட்டுக்கு குறைவில்லாமல் தரவேண்டும். இல்லை எனில் தனியாகவே போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.
தன் மற்றொரு பதிவில், மத்தியில் 400 சீட்டுகளுக்கு மேல் பெற்று 3வது முறையாக வெற்றி பெறுவார் மோடி என்று கருத்துக் கணிப்புகள் சொல்கின்றனர்.
இந்நிலையில் ஆறாக உடைந்து கவர்ச்சிகரமான தலைமையே இல்லாத அதிமுக வுடன் 25 சீட் கொடுத்தாலே கூட்டணி இல்லையேல் பாஜக தலைமையில்
தனி கூட்டணி என்று கூறியுள்ளார்.
அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து பதிவிட்டுள்ள அவர், “1. Vs. 6. மலைக்கு சமம் இல்லை என்பதால் ஆறு தலைகளுடன் நடந்த கூட்டம் தமிழகத்தில் எந்த முடிவையும் மலையே எடுப்பார். அவர் இல்லாமல் டெல்லி தனியாக முடிவெடுக்காது என்பதை ஆறாக உடைந்து போன அதிமுகவுக்கு உணர்த்திய அமித்ஷா மற்றும் ஜேபி நட்டா” என்று கூறியுள்ளார்.
அண்ணாமலைக்கும் தனக்கும் எந்த தகராறும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறி வரும் நிலையில் பாஜகவினர் அதிமுகவை விமர்சித்து வருவது அக்கட்சியினரை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. எஸ்.ஆர். சேகரின் பதிவுக்கு பதிலடி கொடுத்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவை பாஜக நிர்வாகிகள் விமர்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிமுகவுக்கு எதிராக வினையாற்றினால் நாங்கள் எதிர்வினையாற்ற தயாராக இருக்கிறோம் என்று கொந்தளித்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரவிருக்கும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். அதிமுக தலைமயில் கூட்டணி என்றால் அதிக தொகுதிகளில் அதிமுக நின்று மீதியை கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கும் . பாஜக கேட்பது போல் 25 தொகுதிகளை பாஜகவிற்கு ஒதுக்கினால் பாஜக கூட்டணியில் அதிமுக என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். தங்களுக்குள் சண்டை இல்லை என்று என்ன தான் தலைமைகள் சொல்லி வந்தாலும் நிர்வாகிகள் தொடர்ந்து கூறிவரும் கருத்துகள் அதிமுக பாஜக கூட்டணி முறிவதையே விரும்புவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.