AIADMK Office Sealed: சீல் வைத்து மூடப்பட்ட அதிமுக அலுவலகம்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனுக்கள் நாளை விசாரணை..!
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
![AIADMK Office Sealed: சீல் வைத்து மூடப்பட்ட அதிமுக அலுவலகம்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனுக்கள் நாளை விசாரணை..! AIADMK Headquarters Sealed Case Hearing Tomorrow July 14 in Chennai High Court AIADMK Office Sealed: சீல் வைத்து மூடப்பட்ட அதிமுக அலுவலகம்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் மனுக்கள் நாளை விசாரணை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/13/87203d664d06df641fd0106b07f35fb91657723010_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அதிமுக அலுவலகத்தில் சீலை அகற்றக்கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
மிகுந்த பரபரப்புக்கிடையே, கடந்த 11 ஆம் நடந்த அதிமுக பொதுக்குழு இராண்டாவதாக கூடிய நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பூட்டி இருந்த அதிமுக அலுவகத்தை உடைத்து உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த எடப்பாடி ஆதரவாளர்களுக்கும், அவர்களுக்குமிடையே மோதல் உண்டானது. இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, காவல்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருவாய் துறை மூலம் சட்டப்பிரிவு 145 பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை சீல் வைத்து மூடியது. இந்த நிலையில் அதிமுகவின் அலுவலத்தின் சீலை அகற்றக்கோரி ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கானது நாளை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)