மேலும் அறிய

‘வெட்கக்கேடு, தலைகுனியவேண்டும்’ அதிமுக நிர்வாகி கொலையால் கொதித்த EPS..!

”இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது?”

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த குற்றத்தில் தொடர்புடையதாக இதுவரை மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கொலைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்த திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு காவல்துறை குறித்து எந்த பயமும் இல்லை என்று விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இது தொடர்பாக பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ”செந்தில் அவர்கள் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. திரு. செந்தில் அவர்கள் தனது டீக்கடையை திறக்கச் சென்ற போது, அங்கு போதையில் இருந்த ஆசாமிகளை இடையூறு செய்யாமல் செல்லுமாறு கூறியதை ஏற்காதவர்கள், அவரை கொடூரமான முறையில் தாக்கிப் படுகொலை செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

குற்றவாளிகளுக்கு பயமே இல்லை - இபிஎஸ்

நான் அடிக்கடி சொல்லி வருகிறேன்- இந்த திமுக ஆட்சியில் எந்தவித குற்றத்தை செய்வதற்கும் குற்றவாளிகளுக்கு பயம் என்பது துளி கூட இல்லை. இப்படி கொடுரமாக தலை துண்டித்து கொலை செய்யும் அளவிற்கு எங்கிருந்து குற்றவாளிகளுக்கு தைரியம் வருகிறது? சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வக்கில்லாத ஒரு கையாலாகாத பொம்மை முதல்வர் திமுக ஆட்சி இங்கு நடப்பதால் தானே ? தனது ஆட்சியில், ஒரு சாமானியர் காலையில் தனது டீக்கடையைப் பாதுகாப்புடன் திறக்க முடியவில்லை என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான நிலை? இதற்கு உள்ளபடியே திரு. ஸ்டாலின் தலைகுனிய வேண்டும் உயிரிழந்த திரு. செந்தில் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் ,

மிக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – எடப்பாடி வலியுறுத்தல்

திரு.செந்தில் அவர்களைப் படுகொலை செய்த வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். நான் மீண்டும் சொல்கிறேன்- தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான முதல் படி இந்த விடியா திமுக அரசை அடியோடு வீழ்த்துவதே ஆகும்!

தலைப்பு செய்திகள்

1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
சென்னை - திருப்பதி 6 வழிச்சாலை & ஸ்ரீ சிட்டி விரிவாக்கம்! திருப்பதி மாவட்ட வளர்ச்சிக்கான மெகா மாஸ்டர் பிளான்!
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
Jio New Plan: பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
பிளான் ஒன்னு..பலன்கள் பல.! வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கிய ஜியோ; அசத்தலான புதிய சலுகை திட்டம் என்ன.?
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Otherlab Scooter: இனி சார்ஜிங் கவலையே இல்லை...சூரிய ஒளியில் இயங்கும் ஸ்கூட்டர் அறிமுகம்- விலை, ரேஞ்ச்!
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Embed widget