அண்ணாமலை தலைவர் பதவிக்கு தகுதியற்றவர்; பாஜகவுடன் கூட்டணி இல்லை - ஜெயக்குமார் ஆவேசம்!
அண்ணாமலை தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும் இனி அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் என்றும், இனி அண்ணாமலையை அதிமுக தொண்டர்கள் தாறுமாறாக விமர்சிப்போம் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், “எங்களை வச்சி தான் உங்களுக்கு அடையாளம். இது என்னுடைய கருத்து இல்லை. கட்சியின் கருத்து. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். பாஜக தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் வாக்கு வாங்கும். பி.ஜே.பி தலைவருக்கே லாயிக்கு இல்லாதவர் அண்ணாமலை. இனிமேல் அண்ணாமலை சிறுமை புத்தி பற்றி கிழி கிழினு கிழிப்போம். பெரியார் , அண்ணா , புரட்சி தலைவர் , புரட்சி தலைவியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.
பாஜக தேசிய தலைமை சொல்லிடே அண்ணாமலை பேசுகிறாரா..?
அண்ணாமலை தன்னை முன்னிலைபடுத்திக்கொள்ள அந்தர் பல்டி அடிக்கிறார். அம்மா பற்றி பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அண்ணா வரலாற்றை பற்றி பேசுகிறார். அறிஞர் அண்ணாவை சிறுமை படுத்திய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். அடுத்து பெரியாரை இழிவு படுத்துகிறார்.
பெரியார் அடிவாங்குவதை சொல்வேன் என்கிறார். கூட்டணி தர்மத்தை மீறி அண்ணாமலை பேசுகிறார்.
சிட்டுக்குருவிக்கு பட்டம் கட்டினால் திமிர் பிடித்து ஆடும். அண்ணாமலைக்கு கொடுத்த பதவி தகுதிக்கு மீறிய பதவி.
பாஜக தலைவருக்கு லாயக்கு இல்லாதவர். அதிமுக சிங்க கூட்டத்தை பார்த்து சிறுநரி போல் அண்ணாமலை ஊலையிடுகிறார். தனித்து நின்றால் நோட்டாவுக்கு கீழே ஓட்டு வாங்குவாரா? பெரியாரைப் பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது.
கூட்டணி கட்சியை விமர்சனம் செய்யும் அண்ணமலையை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அண்ணாமலையை தாருமாறாக விமர்சனம் செய்வோம். சிருமை புத்தியை பற்றி சமூக வலைதளத்தில் பதிவிடுவோம். அண்ணாமலை செயலால் தேர்தலில் எப்படி கூட்டணி கட்சியினர் வேலை செய்வார்கள். அதிமுகவுடன் கூட்டணியை அண்ணாமலை விரும்பவல்லை. பாஜக தொண்டர்கள் விரும்புகிறர்கள்.
பாஜக கலூன்ற முடியாத நிலை இருந்தது. அதிமுகவை வைத்து தான் அடையாளம் கண்டார்கள். அதிமுக இனி பாஐகவுடன் கூட்டணி் இல்லை. அடுத்த முடிவு தேர்தல் வரும்போது தான் முடிவு செய்வோம். அண்ணாமலை தலைவர்களை விமர்சனம் செய்தால் கடுமையான விளைவுகளை சந்தக்க நேரிடும்." என்று தெரிவித்தார்.