மேலும் அறிய

விவசாய கடன் தள்ளுபடி ; முதல்வரின் தீபாவளி பரிசு...! மகிழ்ச்சியில் விவசாய பெருங்குடிமக்கள்...

தீபாவளிக்கு முன்பாகவே விவசாய கடன் தள்ளுபடி செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.12 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடியை செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதிக்குட்பட்ட தொண்டமாநத்தம் கிராமத்தில் ரூ.2.55 கோடி மதிப்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் புதிதாக கட்டப்பட்டதை  புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள்  ஆகியோர் புதிய மேல்நிலைத் தொட்டியுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

நல்ல குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில்... இந்த குடிநீர் திட்டங்களுக்கு 2015ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று மீண்டும் நான் முதல்வராக இருக்கும் போது திறக்கப்படுவது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் இடையில் நான் இல்லை. அதனால் வேறு யாராலும் இதனை திறக்க முடியவில்லை. மறுபடியும் முதல்வராக வந்து திறக்கின்ற நிலை இருந்து கொண்டிருக்கிறது. இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. புதுச்சேரியில் எல்லோருக்கும் சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. சில இடங்களில் குடிநீரின் தன்மை மாறியிருந்தாலும், அதற்கு மாற்றாக நல்ல குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நகரப்பகுதிகளில் உப்புநீர் உட்புகுந்துள்ளது. இதனால் நல்ல குடிநீர் கொடுப்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது.

கீழூர், சிவராந்தகம் பகுதிகளில் ரூ.450 கோடியில் ஆழ்குழாய் கிணறு போடப்பட்டு நகருக்கு குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டது. அங்கிருந்து குடிநீர் எடுக்க விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது. ரூ.450 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. புதுச்சேரியில் கிராமப்பகுதிகளில் நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 70 லிட்டர் தண்ணீரும், நகரில் நபர் ஒருவருக்கு 140 லிட்டர் தண்ணீரும் கொடுக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும்

 ஊசுடு ஏரி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு சாலை கூட சீரமைக்கப்படவில்லை. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு நிதி ஒதுக்கி நல்ல தார் சாலை, சிமென்ட் சாலை, பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும். அது இருந்தால் அனைத்து திட்டங்களையும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியும். நிர்வாக பிரச்சினை இருந்தாலும் மத்திய அரசின் உதவியுடன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் இன்னும் அதிகமான வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என துணைநிலை ஆளுநர் கூறுவார். அதற்கான தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து வேலை வாய்ப்பை ஏற்படுத்த ஆலோசித்து வருகிறோம். சேதராப்பட்டில் தொழிற்பேட்டையை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விவசாய கடன்கள் தள்ளுபடி

புதுச்சேரியில் விவசாயிகள் பெற்ற கடன் ரூ.13 கோடி உள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.12 கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடியை செய்து தீபாவளி பரிசாக கொடுக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கூறியுள்ளார். ஆகவே தீபாவளிக்கு முன்பாகவே அந்த கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு கிடைக்கும். இதேபோன்று தீபாவளிக்கு முன்பாக ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இலவச அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும். தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை விரைவில் ரேஷன் கடைகள் மூலமாகவே வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
"அமைதியாக இருங்கள்; ஏனென்றால்”... 10 ஆண்டுகளுக்குமுன் தோல்வியின்போது ஓமர் அப்துல்லா பதிவு: வெற்றியின்போது வைரல்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thalavai Sundaram Removed From ADMK | தளவாய் நீக்கப்பட்டது ஏன்?தூக்கியடித்த EPS..தூண்டில் போடும் BJPPolice Attack Old Man | வியாபாரியை அறைந்த SI காலில் விழுந்த முதியவர் பரபரப்பு CCTV காட்சிJammu & Kashmir Election Results : சொல்லி அடித்த ராகுல்! மண்ணை கவ்விய பாஜக!மோடி சறுக்கியது எப்படி?Thalavai Sundaram Removed From ADMK:  தளவாய் சுந்தரம் நீக்கம்!எடப்பாடி  அதிரடி..பாஜகவுடன் நெருக்கமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
சாம்சங் தொழிலாளர் போராட்டம்; 'ஒடுக்கும் அரசு- மே தினத்தில் மட்டும் சிவப்பு சட்டை அணியும் ஸ்டாலின்'- ஈபிஎஸ் கண்டனம்
Breaking News LIVE OCT 9: ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
ரஜினியின் வேட்டையன் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி.!
"அமைதியாக இருங்கள்; ஏனென்றால்”... 10 ஆண்டுகளுக்குமுன் தோல்வியின்போது ஓமர் அப்துல்லா பதிவு: வெற்றியின்போது வைரல்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Vettaiyan Holiday : வேட்டையன் படம் பார்க்க விடுமுறை அளித்த அலுவலகங்கள்...குழந்தைகளைப் போல் குஷியில் ஊழியர்கள்
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Amitabh Bachchan Rajinikanth: 32 ஆண்டுகள் கேப், வேட்டையனில் அமிதாப் பச்சன் - ரஜினி காம்போ, முந்தைய கூட்டணி எப்படி?
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
Salesman, Packer Recruitment: நேர்காணல் மட்டுமே; ரூ.29 ஆயிரம் ஊதியம்- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Vettaiyan : வேட்டையன் டைட்டிலை மாற்ற வேண்டும்...கடுப்பான தெலுங்கு ரசிகர்கள்..என்ன காரணம் ?
Embed widget