![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Sasikala speech: நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும் - சசிகலா பேச்சு
மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும் - சசிகலா
![Sasikala speech: நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும் - சசிகலா பேச்சு ADMK 50th golden jubilee celebration will contiune my battle says sasikala Sasikala speech: நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும் - சசிகலா பேச்சு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/02/8e81de4f55a4e9548caec151d08a8c7c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியல் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும் என்று சசிகலா தெரிவித்தார்.
அஇஅதிமுக 50 ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி சசிகலா ராமாபுரம் தோட்ட இல்லத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், " அதிமுக என்னும் ஆலமரத்திற்கு எம்ஜிஆர் விதையாக இருந்தார். புரட்சித் தலைவி அம்மா மழையாக பொழிந்தார். அதனால் தான் கழகம் விருட்சமாக வளர்ந்தது. இன்று,நமது கழகத்துக்கு பொன்விழா ஆண்டு. இன்று கழகம் ஆட்சிக் கட்டில் இருந்திருந்தால், கட்சியை உருவாக்கியத் தலைவர்களுக்கு பெருமையாக இருந்திருக்கும். சற்று, எண்ணிப் பாருங்கள்.
நமக்குள் ஏற்பட்ட பிரிவுகள்தான் நம் எதிரிகளுக்கு இடம் கொடுத்துவிட்டது. மக்கள் நலனில் நாம் அக்கறை காட்டாவிட்டால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் தூக்கி எறியப்படுவோம் என்பதை உணர வேண்டும். மக்களின் பேராதரவோடு கழக ஆட்சியல் மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். நாம் ஒன்றாக வேண்டும்; கழகம் வென்றாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
50வது ஆண்டு பொன்விழா: அதிமுக கட்சி தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அதிமுக பொன்விழா ஆண்டாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று காலை பொன்விழாவை தொடங்கி வைத்தனர். பின்னர், மெரினாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் சசிகலா அதிமுக கொடி ஏற்றினார். அதிமுக பொன்விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்ற பெயரில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டும் திறக்கப்பட்டது.
மேலும், வாசிக்க:
காஞ்சிபுரம் : அதிமுக பொன்விழா ஆண்டு : இனிப்பு வழங்கிக் கொண்டாடிய அதிமுகவினர்..
கல்வெட்டில் பெயர் செதுக்கி வைத்துவிட்டால் பொதுச்செயலாளரா? ஜெயக்குமார் ஆவேசம்
அதிமுக பொன்விழா இன்று கொண்டாட்டம் : அதிமுக நிரந்தர நாயக கட்சிகளில் ஒன்றாக வளர்ந்தது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)