மேலும் அறிய

மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?

கல்வித் தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை, பலரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு மாதாந்திர உதவித்தொகை வழங்கி வருகிறது. கல்வித் தகுதிக்கேற்ப ரூ.200 முதல் ரூ.1000 வரை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்திற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம் மீண்டும் கவனம் பெற்று வருகிறது.


மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை! வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவது எப்படி?

கல்வித் தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை, பலரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு குறைந்தபட்ச நிதி ஆதரவாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. வேலை தேடி அலைபவர்களுக்கு இது ஓரளவு உதவியாக அமைந்துள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ், 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. உதவித்தொகை பெறுவதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும், பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000-ஐ தாண்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுக்கு இந்த உதவித்தொகை ஓரளவு நிதி ஆதரவாக இருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக இந்த திட்டத்தில் கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்திருந்தாலே விண்ணப்பிக்கலாம். மேலும், அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.மாற்றுத்திறனாளிகளில் 10-ஆம் வகுப்பு அல்லது அதற்குக் குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு மாதம் ரூ.600, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் தங்களது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்படாது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலை கிடைக்கும் வரை குறைந்தபட்ச நிதி ஆதரவாக இந்த திட்டம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நம்பிக்கையளித்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் கால் பதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்! ரங்கசாமியிடம் தஞ்சம் அடைந்த ராமதாஸ் மகள்... ஆகஸ்ட் 9-ல் 'மெகா ஷாக்'!
தமிழகத்தில் கால் பதிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்! ரங்கசாமியிடம் தஞ்சம் அடைந்த ராமதாஸ் மகள்... ஆகஸ்ட் 9-ல் 'மெகா ஷாக்'!
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
CM Vijay: தவெகவை வைத்து காய் நகர்த்தும் பாஜக.. வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!
CM Vijay: தவெகவை வைத்து காய் நகர்த்தும் பாஜக.. வெளுத்து வாங்கிய ஆளூர் ஷாநவாஸ்!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mk Stalin Kolathur : கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
கொளத்தூர் EVM மீது டவுட்டா இருக்கு.! ஸ்டாலின் போட்ட மனு- அதிரடியாக களத்தில் இறங்கிய தேர்தல் ஆணையம்
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Senthil Balaji: சிக்கலில் செந்தில் பாலாஜி.. கரூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 4 பேர் கைது
RB Udhayakumar: ”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
”விஜய் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்..ஒரு ரீல்ஸ், நெஞ்சு வலியே வந்துடுச்சு” புலம்பிய உதயகுமார்
Toyota Urban Cruiser Hyryder: விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
விற்பனையில் மிரட்டும் ஹைப்ரிட் காரில் இவ்ளோ குறைகளா? யாருக்கு செட் ஆகாது? மாற்று ஆப்ஷன்கள்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
அடி தூள்.! மகளீருக்கு கொட்டப்போகுது பணம்.! 7,000 கோடியை கடன் உதவியாக அள்ளிக்கொடுக்கும் சிஎம் விஜய்
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Gold and silver rate today : சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
சவரனுக்கு 1,720 ரூபாய் சரிந்தது.! 2 நாளில் அதிரடி மாற்றம் - இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ
Embed widget