மேலும் அறிய
Actor vijay | உள்ளாட்சி தேர்தல் பரபர.. பனையூர் விஜய் வீட்டில் ஆலோசனை! தீவிரம் காட்டும் விஜய்!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நடிகர் விஜய் பனையூரில் உள்ள வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு ஆலோசனை நடைபெற உள்ளது. தற்பொழுது புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க தொண்டரணி உள்ளிட்ட பிற அமைப்புகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து கூட்டத்திற்கு விஜய், காலை 10 மணி அளவில் வருகை புரிந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















