இயல், இசை, நாடக மன்றத் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்..
1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் - செயலராகப் பதவி வகித்துள்ளார்.
தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு இயல்,இசை, நாடக மன்றத்தின் தலைவராக உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், இதன் தலைவராக வாகை சந்திரசேகரை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், 2003-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றவர் வாகை சந்திரசேகர். 1996-ஆம் ஆண்டு முதல் 2001-ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் - செயலராகப் பதவி வகித்துள்ளார். மேலும், 2016 முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி எம்எல்ஏவாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத் துறையில் தனது குணச்சித்திர நடிப்பால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றிருந்த காரணத்தால், இவரது நடிப்பாற்றலைப் பாராட்டி, 1991-ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. மத்திய அரசால் வழங்கப்படும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.