மேலும் அறிய
Advertisement
Vadivelu Health | கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வடிவேலு விரைவில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை சொல்வது என்ன?
கொரோனா பாதிப்பினால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் வடிவேலு. இவர் தற்போது நடித்து வரும் நாய்சேகர் படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்த நிலையில், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
உடனடியாக அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அந்த நிலையில், வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள வடிவேலு ஆரோக்கியமாக உள்ளார். விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion