மேலும் அறிய

தமிழகத்தை அமைதி பூமியாக வாழவிடுங்கள்: ஆளுநருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

தமிழகத்தை அமைதி பூமியாக வாழவிடுங்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அமீர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

தமிழகத்தை அமைதி பூமியாக வாழவிடுங்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அமீர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந்திய ராணுவத்தில் பணியாற்றி மறைந்த லெஃப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா (Subroto Mitra) எழுதிய The Lurking Hydra: South Asia's Terror Travail என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று (மே 6) நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். அப்போது பேசிய ஆளுநர், 'அரசியல் லாபங்களுக்காக வன்முறையைத் தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசியலுக்காக வன்முறையைத் தூண்டுகிறவர்கள் எல்லாம் தீவிரவாதிகள்தான். தொடர்ந்து பாப்புலர் பிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு குறித்துப் பேசிய ஆளுநர், ' இது மிகவும் ஆபத்தான இயக்கம். மாணவர்களைப் போலவும் மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்து கொண்டு நாட்டில் இயங்கி வருகிறது. இந்த இயக்கம் தீவிரவாத இயக்கங்களுக்குப் பின்புலமாக இயங்குகிறது' என்றார். 

இதற்கு எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இயக்குநரும், நடிகரும், தயாரிப்பாளருமான அமீர் திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், "SDPI, (இந்திய சமூக ஜனநாயக கட்சி) என்பது இன்றைக்கு தேசிய அளவில் இருக்கும் அமைப்புகளில் மிக முக்கியமானது மட்டுமல்ல, மிகவும் கண்ணியமானதும் கூட. படித்தவர்கள் அதிகமானோர் பங்கேற்றுள்ள ஒரு தொண்டு நிறுவனம்.உலகமே கொரோனா பிடியில் இருந்தபோது, உயிரிழந்தோரின் உடலை யாருமே தொட முன்வராத சூழலில், களத்தில் இறங்கி நின்று மிக மரியாதையாக அடக்கம் செய்ததில் இந்த அமைப்புக்கு முக்கிய பங்குள்ளது. தமிழகத்தை அமைதி பூமியாக வாழவிடுங்கள் என்று  வெயில், மழை, வெள்ளக்காலங்களில், பேரிடர் நெருக்கடிகளில் மக்கள் துயரங்களில் துவண்டு கிடந்த போதெல்லாம் தோழனாக நின்று பணியாற்றிய  தூய தொண்டர்களைக் கொண்ட பேரமைப்பு.

இன்றைக்கும் வட இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக உள்ளிட்ட சங்பரிவார அமைப்புகளுக்கு எதிராக களத்தில் நின்று வலுவாகப் போராடக் கூடிய மிக முக்கியமான அமைப்பாக இது விளங்குகிறது. அந்த காழ்ப்புணர்ச்சியால் தான் தமிழ்நாட்டில் பாசிசத்தையும், வெறுப்புணர்வையும் மத அரசியலை விதைக்கும் முகமாகவே ஆளுநர் ரவி, எஸ்டிபியின் மீது பொய்யான தகவல்களை சொல்லியிருக்கிறார்.

தமிழகத்தை அமைதி பூமியாக வாழவிடுங்கள்: ஆளுநருக்கு இயக்குநர் அமீர் கோரிக்கை

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை எஸ்டிபிஐ குறித்து ஓர் ஆடியோவை வெளியிட்டார். அந்த ஆடியோவிலும் ஆளுநர் ரவியின் கருத்தையே குறிப்பிட்டிருந்தார். அவர் ஏற்கெனவே காவல்துறை அதிகாரியாக பணியாற்றியவர். எனவே, எதைச் செய்தால் எது நடக்கும் என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். அதனால் தான், திட்டமிட்டு தான் பேசிய ஆடியோவை அவரே ரகசியமாக கசியவிட்டார். அதன் மூலம் விஷ விதையை தமிழகத்தில் விதைத்திருத்திருந்தார். அதன் நீட்சியாகவே ஆளுநர் இன்று எஸ்டிபிஐ அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார். ஓர் அரசிய கட்சித் தலைவரான அண்ணாமலையை விட ஒருபடி மேலே போய், அரசின் நிர்வாகத்தில் பங்கெடுத்துள்ள ஒரு பொறுப்பு மிக்க பதவியில் இருக்கும் ஆளுநர் இப்படிச் செய்வதென்பது அப்பதவிக்கு அழகானது அல்ல. அதற்கு ஆளுநர் பாஜக தலைவராகவோ அல்லது ஆர்எஸ்எஸ் தலைவராகவோ இருந்து சொல்லியிருந்தால், நமக்கொன்றும் வியப்பு ஏற்பட்டிருக்காது.

ஏற்கெனவே எழுவர் விடுதலையாக இருக்கட்டும், நீட் விலக்கு மசோதாவாக இருக்கட்டும் இதற்கெல்லாம் ஒப்புதல் தராமல் தமிழக அரசும், தமிழக மக்களும் வைத்த கோரிக்கைகளை கிடப்பில் போட்டு தன் கடமையைக் கூட செய்யாத ஆளுநர், இப்போது தனக்கு தொடர்பில்லா விஷயங்களில் தலையிட்டு தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க நினைக்கிறார்.
உண்மையிலேயே எஸ்டிபிஐ அமைப்பு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டிருந்தால், உலகின் எந்த தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு கொண்டிருந்தால் அதற்கு ஆதாரங்களை வெளியிடலாம். அரசாங்கத்தை, அதிகாரத்தை கையில் வைத்திருப்போர் ஆதாரங்களை பொது வெளியில் வெளியிடலாமே. அதை விடுத்து ஆதாரமற்ற புகாரால் மக்களிடம் குழப்பத்தை, பதட்டத்தை ஏற்படுத்தும் சொல் விளையாட்டு நல்லதல்ல. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் செய்யக்கூடியதும் அல்ல.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாமல் அதிகாரத்திற்கு வருபவர்கள், மக்களுக்கு எதிராகவே செயல்படுவதென்பது வாடிக்கையாகி வருவது வேதனைக்குரியது.

எனவே, இது மாதிரியான வெறுப்புணர்வை விதைக்கும் பேச்சுகளை ஆளுநரோ, அரசியல் தலைமைகளோ, பேசுவதைக் கைவிட்டு தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வாழவிடுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget