மேலும் அறிய

Actor Srinath: நடிகர் ஸ்ரீநாத்துக்கு அமைச்சர் பதவியா? விஜய்யின் உயிர் நண்பனுக்கு ஜாக்பாட்!

தவெக-வின் முதல் எம்எல்ஏ-வும், விஜய்யின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஸ்ரீநாத்திற்கு அமைச்சரவையில் இடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ் கூட்டணி, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

நாளை புதிய அமைச்சர்கள்:

தவெக அரசில் தற்போது வரை 9 பேர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுள்ள நிலையில், நாளை எஞ்சியவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பர்வேஸ், பார்த்திபன், ரமேஷ் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், விஜய்யின் நண்பரும், தூத்துக்குடி எம்எல்ஏ-வான நடிகர் ஸ்ரீநாத் அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீநாத் அமைச்சரா?

நடிகர் ஸ்ரீநாத் விஜய்யின் நீண்டகால நண்பர். விஜய்யின் மிக மிக நெருங்கிய நண்பரான இவர் அவரின் ஆரம்பகால திரையுலகம் முதலே நண்பராக இருந்து வருகிறார். விஜய் கட்சி தொடங்கியது முதலே அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஸ்ரீநாத் தன்னையும் தவெக-வில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். 

அவருக்கு தூத்துக்குடியில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார். அந்த வாய்ப்பை பயன்படுத்தி தீவிர பரப்புரையில் ஈடுபட்ட ஸ்ரீநாத் முன்னாள் அமைச்சரான கீதா ஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றில் அவர்களின் முதல் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத்தே ஆவார். 

விஜய்யின் நெருங்கிய நண்பர்:

52 வயதான ஸ்ரீநாத் சென்னையில் பிறந்தவர். இவர் 1973ம் ஆண்டு ஜுலை 18ம் தேதி பிறந்துள்ளார். விஜய்யின் கல்லூரி கால நண்பரான இவர் நாளைய தீர்ப்பு படத்திலே அவருக்கு நண்பராக நடித்து விஜய்யுடன் இணைந்து அவரும் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், மாண்புமிகு மாணவன் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

பின்னர், 12 பி படத்தில் நடித்ததுடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, காதல் வைரஸ், அலை, உள்ளம் கேட்குமே, வட்டாரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம் ஆகிய படங்கள் மூலம் இவர் மிகவும் பிரபலம் ஆனார்.  குட்டி, உத்தமபுத்திரன், ரெளத்திரம், மனம் கொத்தி பறவை ஆகிய படங்களிலும் இவரது நகைச்சுவை பிரபலம். விஜய்யுடன் இவர் வேட்டைக்காரன், மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார். ஜனநாயகன் படத்திலும் இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகராக மட்டுமின்றி இயக்குனராக முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், லெக் பீஸ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான காதலிக்க நேரமில்லை சீரியலிலும் நடித்துள்ளார்.

மக்கள் எதிர்பார்ப்பு:

நடிகராகவும், விஜய்யின் நண்பராகவும் அறியப்பட்ட ஸ்ரீநாத் தவெக அலையால் தூத்துக்குடியில் வெற்றி பெற்றார். இவர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்ற தகவல் அனைவருக்கும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவரது செயல்பாடு எப்படி இருக்கப்போகிறது? இவர் களத்தில் எப்படி செயல்படப்போகிறார்? என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
Tondiarpet IOC Bus Terminus: 40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் அந்த பிரம்மாண்ட மாற்றம்!
40 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு விடிவுகாலம்! வடசென்னையில் நடக்கப்போகும் பிரம்மாண்ட மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
தொழில்துறையினருக்கு செம்ம நியூஸ்! இனி ஒரே நாளில் அப்ரூவல்.. தமிழக அரசு கொண்டுவந்த செம மாற்றம்!
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
சென்னை விமான நிலையத்தில் ஆசனவாயில் மறைத்த ரூ.3 கோடி தங்கம் சிக்கியது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Embed widget