TN Weather Update: தென்தமிழக மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. இன்றைய வானிலை நிலவரம் இதோ..
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழக பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென்தமிழக பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) February 7, 2023
07.02.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
08.09.2023 முதல் 11.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) February 7, 2023
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இந்நிலையில், கடுமையான பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும் ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.