மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம் இதோ...

தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக 9 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நேற்று (08.05.2023) தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 05.30 மணி அளவில் (09.05.2023) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக வலுப்பெற்று அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று நாளை (10.05.2023) தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல்  பகுதிகளில் புயலாக மேலும் வலுப்பெறக்கூடும். இது 11.05.2023 வரை வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு  திசையில் திரும்பி  வங்கதேசம் - மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும்.

09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

10.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

11.05.2023 முதல் 13.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை : 

09.05.2023 முதல் 13.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4  டிகிரி செல்சியஸ் உயரக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்) 9, விருதுநகர், விருதுநகர் AWS தலா 7, சின்னார் அணை (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), சிங்கம்புணரி (சிவகங்கை), ராசிபுரம் (நாமக்கல்) தலா 6, அம்மாபேட்டை (ஈரோடு), அரண்மனைப்புதூர் (தேனி), குமாரபாளையம் (நாமக்கல்), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 5, பேரையூர் (மதுரை), மூலனூர் (திருப்பூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கள்ளிக்குடி (மதுரை) தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அந்தமான் கடல் பகுதிகள்:

09.05.2023 காலை அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

10.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

11.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75  கிலோ மீட்டர் வேகத்திலும்  வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

09.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும்,

10.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

11.05.2023 அன்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும்,

12.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.05.2023 அன்று சூறாவளிக்காற்று  மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்:

09.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

10.05.2023 மாலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

11.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும்,

12.05.2023 & 13.05.2023 அன்று மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்:

09.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

10.05.2023 மாலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80  கிலோ மீட்டர் வேகத்திலும்,  

11.05.2023 அன்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும்,

12.05.2023 & 13.05.2023 அன்று மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள  மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானைPriyanka Gandhi : ’’நான் ஜெயிச்சுட்டேன் அண்ணா!’’ ராகுலை மிஞ்சிய பிரியங்கா!பாசமலருக்கு அன்பு கடிதம்Maharastra CM :  ஷிண்டே  vs ஃபட்னாவிஸ் புதுகணக்கு போடும் பாஜக! முதல்வர் அரியணை யாருக்கு?Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Stand Up India Scheme: நாளைய முதலாளிகளே..! ரூ.1 கோடி வரை கடன், 18 மாதங்கள் வட்டியே இல்லை - கொட்டிக் கொடுக்கும் மத்திய அரசு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Lucky Bhaskar Ott Release : தியேட்டர்ல மிஸ் ஆகிடுச்சா... துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
IPL Auction 2025 LIVE: இன்று தொடங்குகிறது ஐபிஎல் ஏலம்! தட்டித் தூக்கப்போவது யார்?
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
BJP Congress: குட்டையை குழப்பும் காங்கிரஸ், பாஜகவிற்காக உழைக்கும் காந்தி குடும்பம், கதறும் I.N.D.I., கூட்டணி
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Jaiswal-KL Rahul Record: இதான்டா ரெக்கார்ட்! 38 ஆண்டுகால வரலாற்றை உடைத்து நொறுக்கிய ராகுல் - ஜெய்ஸ்வால்!
Embed widget