மேலும் அறிய

TN Rain Alert:லீவ் முடிச்சு ஆபீஸ் போறீங்களா? கரையை கடக்கும் புயல் - 19 மாவட்டங்களில் மழை இருக்கு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், திருச்சி, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம்  கணித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 30 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  நிலவிய   ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன் தினம்  ஹாமூன் புயலாக வலுப்பெற்று, நேற்று தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது நேற்று காலை  08.30 மணி அளவில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக மாறியது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை கெபுபரா (Khepupara) மற்றும் சிட்டகாங் (Chittagong) இடையே இன்று மாலை கடக்கக்கூடும் என்றும் அடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேபோல் மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய  மிக தீவிர ‘தேஜ்’ புயல் நேற்று (24-10-2023) காலை  தெற்கு அல்-கைதா (Al-ghaidah)க்கு மிக அருகில் ஏமன் கடற்கரையை கடந்தது. இது மேலும் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து புயலாக வலுவிழந்துள்ளது. மேலும் வங்கதேசம் சிட்டகாங்கிற்கு தெற்கே கடக்கும் எனவும் அப்போது காற்றின் வேகம் 100 கிமீ வேகம் வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

வடகிழக்கு வங்க கடல் பகுதிகள்: 

25.10.2023: சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

வடமேற்கு வங்க கடல் பகுதிகள்: 

25.10.2023: சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.

மத்திய வங்க கடல் பகுதிகள்: 

25.10.2023: சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் மாலையில் படிப்படியாக குறைந்து மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும்  வங்கதேச கடற்கரை பகுதிகள்: 

25.10.2023:   சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
அமித்ஷா கொடுத்த பிளான்.! டிடிவி, ஓபிஎஸ்யை தூக்க ஸ்கெட்ச்- ஆக்‌ஷனில் அண்ணாமலை- நடப்பது என்ன.?
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
Tamilnadu Roundup: தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
தவெக கூட்டம்-துப்பாக்கியுடன் வந்த நபர், பாஜக கூட்டணியில் மீண்டும் டிடிவி, ஓபிஎஸ்?, குறைந்த தங்கம் விலை - 10 மணி செய்திகள்
Embed widget