Accident: சிதறிய உடல்கள்...6 பேர் உயிரிழப்பு...கோயிலுக்கு சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம்...!
ஆந்திராவில் காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
Accident: ஆந்திராவில் காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருப்பதி கோயில்
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம், ஆந்திரா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று நண்பகல் திருப்பதிக்கு அருகே கோர விபத்து நடந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோர விபத்து
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்து ஒரு குடும்பத்தினர் திருப்பதி ஏழுமலையான கோயிலுக்கு சென்றனர். இதனை அடுத்து, ஏழுமலையானை தரிசித்த பின் காளஹஸ்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். காலஹஸ்தி அருகே அவர்கள் பயணித்த கார் மீது எதிர் திசையில் இருந்து வந்து கொண்டிருந்த லாரி வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற போது காரில் ஏழு பேர் இருந்தனர்.
இந்த நிலையில் கார் மீது லாரி மோதியதில் கார் நொறுங்கி அதில் பயணித்த ஆறு பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்த காலஹஸ்தி போலீசார் படுகாயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மரணமடைந்தவர்களின் உடல்கள் காளஹஸ்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேல் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
TN Rain Alert: மக்களே.. அடுத்த 3 மணி நேரம்.. 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகுது மழை..! எங்கெங்கு?
CM Stalin: ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்கள் - என்னென்ன..?