கரூர்: ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா! சிறப்பு பொருட்களால் அபிஷேகம்!
ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயம் மண்டபத்தில் சிவாச்சாரியார் தலைமையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து மூலிகை பொருட்களால் யாகம் நடைபெற்றது.
அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஆண்டாங் கோவில் ரோடு அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயம் மண்டபத்தில் சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து யாக மூலிகை பொருட்களால் யாகம் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தத்தால் பரிவார தெய்வங்களான கன்னி விநாயகர், ஐயப்பன், பாலமுருகன், துர்க்கை அம்மன், கோகுலகிருஷ்ணன், தட்சணாமூர்த்தி, ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக மூலவர் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய் , இளநீர், திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து மூலவர் ஸ்ரீ கற்பக விநாயகருக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து தங்க கவச உடையால் அலங்காரம் செய்யப்பட்ட பிறகு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை நடைபெற்றது.
ஆலயத்தில் நடைபெற்ற 24-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை பிரசாதம் உள்ளிட்டவர்களை வழங்கி சிறப்பித்தனர்.
அதைத்தொடர்ந்து சக்கரை பொங்கல், புளி சாதம், லெமன் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட பல்வேறு வகையான கலவை சாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. சின்ன ஆண்டாங் கோவில் ரோடு அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற 24 -ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
அருள்மிகு ஸ்ரீ விசுவகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு
கரூரில் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விநாயகர் அருள் பெற்றனர். கரூர் மாநகராட்சியில் மாரியம்மன் ஆலயம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகருக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்கள் பால், மஞ்சள், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், கரும்புச்சாறு, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மகா தீபாராதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டு பக்தர்கள் ஏராளமானோர் விநாயகரை தரிசித்து சாமி தரிசனம் பெற்றனர். முன்னதாக விஷேச பூஜைகள் மற்றும் யாகங்களும், தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.