மேலும் அறிய

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஓன்றியம் ஆண்டாங்கோவில் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டாங் கோவில் மேற்கு ஊராட்சி, கோவிந்தம் பாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான நடைபெற்ற மருத்துவ முகாமில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் நாம் ஒன்றிணைவோம், பசுமையும் தூய்மையும், நமதாக்குவோம் என்ற அடிப்படையில் ஆண்டாங்கோவில் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளுவதையும், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைபணியாளர்கள் பொது மக்களின், வீட்டிற்கே தினம்தோறும் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை போன்றவற்றை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் வழங்கியதையும்,  மேலும் பொதுமக்களுக்கு தூய்மை பணியாளர்கள் வரும் பொழுது தங்களுடைய வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என்று தனித்தனியாக பிரித்து வழங்குவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

தொடர்ந்து கோவிந்தம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டத்தின் கீழ் அமராவதி பாசன பிரிவு ராஜவாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  பிரபசங்கர் பார்வையிட்டார்.

கரூரில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - ஆட்சியர் தொடங்கி வைப்பு

நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி. வாணி ஈஸ்வரி, உதவி பொறியாளர் திரு. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. வினோத், திருமதி. கிருஸ்டி, ஆண்டாள் கோவில் மேற்கு ஊராட்சி மன்ற தலைவர் திரு. பெரியசாமி, அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திறன் மிகு விளையாட்டு வீரர்/வீராங்கனைளுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையட்டு வீரர்/வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் கீழ்கண்ட மூன்று வகைகளில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.   இதுகுறித்த   செய்தியினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  டாக்டர் த.பிரபுசங்கர்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில் 

  • தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (Special Scholarship for Elite Sportspersons Scheme - ELITE) – அதிகபட்சம் 25 நபர்கள் வரை ஓர் ஆண்டுக்கு மட்டும் அதிகபட்ச உதவித் தொகை ரூ.30 இலட்சம் வரை வழங்கப்படும்.

(i)    கடந்த 2 ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.  (அல்லது) கடந்த 2 ஆண்டு காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவைகளில் பங்கு  பெற்றிருக்க வேண்டும்.

(ii) ஆசிய விளையாட்டுப் போட்டி/ காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப்/கமான்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டு காலங்களில் முதல் 8 இடங்களில்  இடம்   பெற்றிருக்க   வேண்டும். 

(iii)   ஒலிம்பிக்கில் தனிநபர் / இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

(iv) கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.

  • பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme - MIMS) – அதிகபட்சம் 75 நபர்களுக்கு / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட அதிகபட்ச உதவித்தொகை ஓராண்டுக்கு ரூ.12 இலட்சம் வரை)

(i) அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

(ii) ஒலிம்பிக் / ஆசிய விளையாட்டு போட்டி / காமன்வெல்த்  போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.

(iii) 01.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் 

வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme - CDS) அதிகபட்சம் 100 நபர்களுக்கு மிகாமல் / 10 மாற்றுத்திறனாளிகள் உட்பட மற்றும் அதிகபட்சம் உதவித்  தொகை  ஓர் ஆண்டுக்கு  ரூ.2.00 இலட்சம் வரை)

(i) அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றவர்கள் மட்டும்.

(ii) 01.12.2022 அன்று 20 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

தேர்வு முறை

 பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு  (High Level Selection Committee) மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள்   (Shortlisted Candidates) நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர் அதிக பட்சம் விதிகள் மற்றம் நிபந்தனைகளக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படும்.

 மேற்காணும் திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 05.05.2023 முதல் 20.05.2023 மாலை 5 மணி வரை சமர்பிக்கலாம். 

விளையாட்டு  வீரர்கள்   தங்களது விண்ணப்பங்களை இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி   மற்றும்   நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேற்காணும் மூன்று திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கெனவே விண்ணப்பங்களை விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான  போட்டிகளில்  வெற்றி  விவரங்களை   ஏற்கெனவே   உள்ள  தங்களுடைய Registration ID மூலம்  புதுப்பித்துக்  கொள்ளலாம். 

  மேலும்   புதிய   விண்ணப்பதாரர்கள்   தங்களது  விண்ணப்பங்களை 05.05.2023 முதல் 20.05.2023 வரை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். மேற்காணும் விவரங்களுக்கு   ஆடுகளம் என்ற தகவல்  மையம்  95140  00777 மற்றும் 78258 83865 என்ற   எண்களை   அனைத்து  வேலை   நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என  கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
HMPV virus: அச்சச்சோ.. சென்னைக்கும் பரவிய எச்எம்பிவி வைரஸ்? 2 பேருக்கு பாதிப்பு?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Rasipalan January 7:கடகத்துக்கு நன்மை; கும்பத்துக்கு பக்தி - இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
Marudhu Alaguraj  : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
Marudhu Alaguraj : “யார் அந்த கோடநாடு Sir?” கேள்வி எழுப்பிய மருது அழகுராஜ் – அதிர்ச்சியில் EPS..!
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
TN Assembly: ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு; மரபை மீறியது அரசா? ஆர்.என்.ரவியா? உண்மை என்ன?
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா?  பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர்  அடித்து கூறிய அக்ஷிதா!
Bigg Boss Tamil Season 8: இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனா? பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் இவர் அடித்து கூறிய அக்ஷிதா!
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget