மேலும் அறிய

புதுச்சேரி வாகன ஓட்டிகளுக்கு மெகா குட் நியூஸ்! இந்திரா - ராஜிவ் சதுக்க டிராபிக் தலைவலிக்கு வந்தாச்சு எண்ட் கார்டு!

புதுச்சேரி மக்களின் இந்த நீண்ட நாள் டிராபிக் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஒரு பிரம்மாண்ட ரூட் மேப் தயாராகி, பணிகள் தொடங்கும் நிலையை எட்டியுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அமைதியான கடற்கரையும் பிரெஞ்சு காலத்து கட்டடங்களும் தான். ஆனால், உள்ளூர் மக்களிடம் கேட்டால் இந்திரா மற்றும் ராஜிவ் சதுக்கங்களில் மாட்டிக்கொண்டு படும் அவஸ்தைகளைத்தான் அடுக்குவார்கள். குறிப்பாக, 'பீக் ஹவர்'சில் இந்த இரண்டு சிக்னல்களையும் கடப்பது வாகன ஓட்டிகளுக்கு ஒரு இமாலய சாதனையாகவே இருந்து வருகிறது. மக்களின் இந்த நீண்ட நாள் டிராபிக் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஒரு பிரம்மாண்ட ரூட் மேப் தயாராகி, பணிகள் தொடங்கும் நிலையை எட்டியுள்ளது.

புதுச்சேரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அமைதியான கடற்கரையும் பிரெஞ்சு காலத்து கட்டடங்களும் தான். ஆனால், உள்ளூர் மக்களிடம் கேட்டால் இந்திரா சதுக்கம் மற்றும் ராஜிவ் சதுக்கங்களில் மாட்டிக்கொண்டு படும் போக்குவரத்து அவஸ்தைகளைத்தான் அடுக்குவார்கள். குறிப்பாக, 'பீக் ஹவர்' (Peak Hours) என்று சொல்லப்படும் அலுவலக மற்றும் பள்ளி நேரங்களில் இந்த இரண்டு முக்கிய சிக்னல்களையும் கடப்பது வாகன ஓட்டிகளுக்கு ஒரு இமாலய சாதனையாகவே இருந்து வருகிறது. புதுச்சேரி மக்களின் இந்த நீண்ட நாள் டிராபிக் தலைவலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது ஒரு பிரம்மாண்ட ரூட் மேப் தயாராகி, பணிகள் தொடங்கும் நிலையை எட்டியுள்ளது.

3.8 கி.மீ தூரத்திற்கு அமையவுள்ள மெகா பாலம்

இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை சுமார் 3.877 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணுகுசாலையுடன் (Approach Road) கூடிய மெகா உயர்மட்ட மேம்பாலம் அமையப்போகிறது. புதுச்சேரியின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படும் இத்திட்டத்திற்கு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி அவர்கள் அடிக்கல் நாட்டியிருந்தார்.

அடிக்கல் நாட்டப்பட்டு, "திட்டமெல்லாம் ஓகே... ஆனால் எப்போது வேலை நடக்கும்?" என்று புதுச்சேரி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தற்போது ஒரு லேட்டஸ்ட் குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

டெண்டர் ரேஸில் வென்ற புனே நிறுவனம்

சென்னை மண்டல மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், இந்த மேம்பாலப் பணிகளுக்கான டெண்டரை கோரியிருந்தது. இதில் இந்தியாவின் பல முன்னணி டாப் கட்டுமான நிறுவனங்கள் போட்டி போட்டன.

மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த டெண்டர் ரேஸின் இறுதியில்:

புனேவைச் சேர்ந்த 'டி அண்ட் டி இன்பரா லிமிடெட் தர்வால் பில்டெக் லிமிடெட்' (T&T Infra Ltd - Dharwal Buildtech Ltd) கூட்டணி இத்திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைந்த தொகையாக ரூ. 237.52 கோடியை கோட் (Quote) செய்து இந்த மெகா புராஜெக்ட்டை தட்டிப்பறித்துள்ளது. மத்திய அரசும் இக்கூட்டணியின் ஒப்பந்தத்திற்குத் தனது கிரீன் சிக்னலைக் காட்டி, அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை (Letter of Approval) வழங்கியுள்ளது.

திட்டத்தின் சுருக்கமான பார்வை 

  • பாலம் : இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை
  • மொத்த நீளம் : 3.877 கிலோ மீட்டர்,
  • ஒப்பந்த தொகை ரூ. 237.52 கோடி
  • ஒப்பந்த நிறுவனம் டி அண்ட் டி இன்பரா & தர்வால் பில்டெக் கூட்டணி

அடுத்த லெவலுக்குச் செல்லும் புதுச்சேரியின் உள்கட்டமைப்பு!

டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்து விட்டதால், இன்னும் ஒருசில நாட்களில் ராஜிவ் மற்றும் இந்திரா சிக்னல் பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்களின் சத்தமும், கட்டுமானப் பணிகளும் தொடங்கவுள்ளன. இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும் போது, புதுச்சேரியின் மையப்பகுதி ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து நெரிசலில் இருந்து விடுபடும். இதுமட்டுமன்றி, இதனுடன் சேர்த்து ரூ. 650 கோடி மதிப்பீட்டில் வரவிருக்கும் புதுச்சேரி - கடலூர் சாலை மேம்பாலப் பணியும் தொடங்கப்படவுள்ளது. இந்த இரண்டு மாபெரும் பாலங்களின் பணிகளும் நிறைவடையும் போது, புதுச்சேரி நகரின் உள்கட்டமைப்பு மற்றும் சாலைப் போக்குவரத்து வசதிகள் அடுத்த லெவலுக்கு உயரும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

தலைப்பு செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடக்கம்! புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
வடகிழக்கு பருவமழை தொடக்கம்! புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!
அரசு பேருந்தில் “திமுக ஒரு தீயசக்தி... எங்க உங்க அப்பாவ காணோம்!” - 5 பேர் சஸ்பெண்ட்!
அரசு பேருந்தில் “திமுக ஒரு தீயசக்தி... எங்க உங்க அப்பாவ காணோம்!” - 5 பேர் சஸ்பெண்ட்!
சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
சிங்கத்தையே சிறு எலியாக்கும் யாளி! கோயில் தூண்களில் ஒளிந்திருக்கும் மர்மக் கலை ரகசியம்!
Gold and Jewelry Appraiser Training :தங்க நகை மதிப்பீட்டாளர் ஆகலாம்! சென்னையில் 5 நாள் பயிற்சி – 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Gold and Jewelry Appraiser Training :தங்க நகை மதிப்பீட்டாளர் ஆகலாம்! சென்னையில் 5 நாள் பயிற்சி – 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget