மேலும் அறிய

Auroville Festival : "ஆரோவில்லில் இப்படி ஒரு திருவிழாவா?" அசந்து போன வெளிநாட்டினர்...!

1000க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு, விவசாயிகள், நிலைத்தன்மை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆரோவில்: சர்வதேச நகரமான ஆரோவில்லில் பாரம்பரிய சிறுதானிய திருவிழா ஆர்வத்துடன் பங்கேற்ற வெளிநாட்டினர் மற்றும் பொதுமக்கள், விவசாயிகள். 

ஆரோவில் இசை அம்பலம் பள்ளி நடத்திய பாரம்பரிய விதை, காய்கறி மற்றும் சிறுதானிய திருவிழா நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பாரம்பரிய விதைகள் மற்றும் காய்கறிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டு, விவசாயிகள், நிலைத்தன்மை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

ஆரோவில் அறக்கட்டளை, இசை அம்பலம் பள்ளி, இந்திய அரசின் கல்வி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் நடைபெற்றது. இந்த திருவிழாவின் அனைத்து ஏற்பாடுகளும் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. கண்காட்சிக் கூடங்களை அமைத்தல், கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், பங்கேற்பாளர்களை வரவேற்றல் போன்ற பணிகளில் மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர். இன்றைய நிகழ்வில், ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது கைகளால் டெரகோட்டா விநாயகர் உருவம் உருவாக்கியது அனைவரையும் மகிழ்வித்தது. மேலும், அவர் தனது சக மாணவர்களுக்கும் இதை செய்ய கற்றுக்கொடுத்தார்,

இந்த நிகழ்வு, பொதுமக்களுக்கு நாம் தினமும் உண்ணும் உணவுகள், அவற்றின் வகைகள், தோற்றம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு நிகழ்வாக அமைந்தது. இதுபற்றி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாவது, பல்வேறு வகையான காய்கறிகள், சிறுதானியங்கள், அரிசி வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்து மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது. விவசாயிகள் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், முழுவதுமாக மரம் மற்றும் செடிகளில் இருந்து கிடைக்கும் இயற்கை பொருட்களை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் உருவாக்கி, மக்களை இயற்கை முறையில் வாழ்வதற்கான பயிற்சியை வழங்கினோம்.

சிறுதானியங்கள் உணவு 

சிறுதானியங்களில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகளும், ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் நோக்குடன் வழங்கப்பட்டன. நிகழ்வில் பாரம்பரிய விதைகள் விற்பனைக்காக வழங்கப்பட்டன. மக்களுக்கு தங்கள் சொந்த வீட்டுத் தோட்டங்களில் மாடித் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டது.

விதை பொருட்கள் நேரடி விற்பனை 

விவசாயிகள் சந்தையும் அமைக்கப்பட்டு, விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு பெற்றனர். இதன் மூலம் அவர்கள் இந்திய பாரம்பரிய விதைகள், காய்கறிகள் மற்றும் அவற்றின் பல்வேறு வகைகள் பற்றிய தகவல்களையும் மக்களுக்கு வழங்கினர். மற்றொரு சிறப்பு அம்சமாக, உணவு கடைகள் அமைக்கப்பட்டு, மக்கள் மூலிகை தேநீர், சிறுதானிய பனிக்கூழ், இயற்கை ஸ்நாக்ஸ் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உண்டனர்.

இந்நிகழ்வில் இசை அம்பலம் பள்ளி மற்றும் ஆரோவில் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய கலைகள் மற்றும் போர் பயிற்சிகளை உற்சாகத்துடன் வெளிப்படுத்தினர். அதில் சிலம்பாட்டம், கொல்லாட்டம், தமிழ் மரபு போர் கலைகள் மற்றும் பரதம் இடம் பெற்றன.

விதை திருவிழாவில் பங்கேற்றோர் கூறுகையில், 

இந்த நிகழ்வுகள் மூலம் உணவுப் பழக்க வழக்கங்கள், விவசாயத்தின் முக்கியத்துவம் மற்றும் பசுமை வாழ்க்கை முறைகளை பின்பற்றுவதன் நன்மைகளை புரிந்து கொள்ள வழி வகுத்தது. உணவு பற்றிய புரிதலை வளர்த்தது மட்டுமல்லாது, பாரம்பரிய மற்றும் பசுமை வாழ்வியல் முறைகளை முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணிசெல்வப்பெருந்தகையை மாற்ற முடிவு? அண்ணாமலை IPS, -க்கு போட்டியாக IAS! சசிகாந்த்தை டிக் அடித்த ராகுல்Shihan Hussaini Vijay | குரு துரோகியா விஜய்? ”டிராகனுக்கு டைம் இருக்கு ஹுசைனியை பாக்க மனமில்லை”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இலையில் மலரும் தாமரை.. இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
கூட்டணிக்கு ரெடியான இபிஎஸ்.. அமித் ஷாவுடன் சந்திப்பு.. என்ன பேசி இருப்பாங்க?
திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Passed Away: திரையுலகில் அதிர்ச்சி... இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணம்! காரணம் என்ன?
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
Manoj Bharathiraja Video: சூப்பர் ஹிட் படத்தில் ரஜினிகாந்துக்கு டூப் போட்ட மனோஜ் பாரதிராஜா! வைரலாகும் வீடியோ!
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்!  ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
GT vs PBKS: போராடி தோற்ற குஜராத்! ரூதர்போர்டு போராட்டம் வீண்.. பஞ்சாப் அணி முதல் வெற்றி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
திமுக அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு செய்தது என்ன? முதல்வர் ஸ்டாலினிடம் அண்ணாமலை கேள்வி
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
பள்ளி மாணவிக்கு நிற்காத பேருந்து; தலைதெறிக்க பின்னாலேயே ஓடிய மாணவி- இறுதியில் ட்விஸ்ட்!
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
TNPSC Vacancy: வெளியான அசத்தல் அப்டேட்; அரசு பணியிடங்களை அதிரடியாக உயர்த்திய டிஎன்பிஎஸ்சி- எதில்? எவ்வளவு?
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
கலைஞரின் உயரம் தெரியுமா? அவர் செய்தவை என்ன? பட்டியலிட்டு பாஜகவை சாடிய அமைச்சர் அன்பில் மகேஸ்!
Embed widget