மேலும் அறிய

Gas Cylinder: சிலிண்டர் இணைப்பு கேட்டால்.. அடுப்பு வாங்க கட்டாயப்படுத்துறாங்களா..? இதோ புகார் எண்.. கவலை வேண்டாம்..!

வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

2025 -ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல் இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறும் பொது மக்களிடம் கேஸ் அடுப்பு வாங்குமாறு விநியோகஸ்தர்கள் வற்புறுத்தினால் 24339236 என்ற கட்டணமில்லா என்னை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். 

எத்தனால் கலந்த பெட்ரோல்:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில தலைவர் & செயல் இயக்குனர் அசோகன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முன்னெடுப்புகள் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: “இந்தியன் ஆயிலைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மிக முக்கியமான சந்தையாக இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் 54,000 கோடி ரூபாய் தமிழகத்தில் பல்வேறு முக்கிய திட்டங்களில் முதலீடு செய்ய இருக்கிறோம்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெட்ரோல் உடன் 10 சதவீதம் எத்தனால் கலப்பை எட்டி இருக்கிறோம். 2025 -ஆம் ஆண்டிற்குள் இதை 20 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறோம்.

விரிவுபடுத்த திட்டம்:

மேலும் தமிழ்நாட்டில் இதுவரை 26 சில்லறை விற்பனை நிலையங்களில் 20% எத்தனால்  கலக்கப்பட பெட்ரோல் (E-20) விநியோகம் நடைபெற்று வருகிறது .2024 ஆம் ஆண்டுக்குள் இதை 66 நிலையங்களுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் 400 EV சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது .மேலும் 300 நிலையங்களை தமிழகத்தில் அமைக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை விமான நிலையத்திலும் ஒரு EV சார்ஜிங் நிலையம் அமையவிருக்கிறது. இந்த நிலையங்களில் ஒரு யூனிட் 24 ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.

தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதில் இந்திய ஆயில் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் 2046 -ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய செயல்பாட்டு உமிழ்வை  அடைய தீர்மானித்திருக்கிறோம். அதேபோல இந்தியன் ஆயில் நிறுவனம் பசுமை ஆற்றலுக்கு நாட்டை எடுத்துச் செல்லும் நோக்கில் புதுப்பிக்கதக்கவை, பசுமை ஹைட்ரஜன், சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மூலம் கார்பன் ஈடு செய்தல் போன்ற பல முயற்சிகளை செயல்படுத்தி வருகிறோம்.

புகார் எண்:

இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து எல் என் ஜி விநியோக நிலையங்களை அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறது. தமிழகத்தில் 6 எல் என் ஜி விநியோகம்  நிறுவனங்களை நிறுவ இருக்கிறோம். இந்த எரிபொருள் டீசலுக்கு மாற்றாகவும் நீண்ட தூர வாகனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். ஐந்து கிலோ எடையுள்ள மினி சமையல் கேஸ் சிலிண்டர் "சோட்டு" இரண்டு கிலோ எடையுள்ள சிலிண்டர் "முன்னா" உள்ளிட்டவை இடம்பெயரும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது.

புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெறும் பொது மக்களிடம் கேஸ் அடுப்பு வாங்குமாறு விநியோகஸ்தர்கள் வற்புறுத்தினால் 24339236 என்ற டோல் ஃப்ரீ என்னை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம் அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்துறை குடுங்க, இல்லனா...” பிடிவாதமாக இருக்கும் ஷிண்டே! விழிபிதுங்கி நிற்கும் பாஜகஉதயநிதி முன் தள்ளுமுள்ளு! போர்வையை இழுத்த பெண்கள்! கோபத்தில் கத்திய POLICEAadhav Arjuna : ”திமுக-னா பல் இளிப்பீங்க விஜய்-னா மட்டும் கசக்குதா?” திருமாவை- விளாசும் தவெக! | TVKJose Charles Profile : ”அடுத்த CM என் பையன் தான்”லாட்டரி மார்டின் ஸ்கெட்ச்!யார் இந்த ஜோஸ் சார்லஸ்? | Lottery Martin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
Duraimurugan: ஏம்பா..! எடப்பாடி, அன்புமணிக்கு விஷயம் தெரியுமா? தெரியாதா - அமைச்சர் துரைமுருகன் நச் பதிலடி
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
SSC CGL RESULT 2024: மத்திய அரசின் சிஜிஎல் தேர்வு முடிவு எப்போது? காத்திருக்கும் தேர்வர்கள்! எஸ்எஸ்சி சொல்வது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
PSLV-C59 Proba-3 Mission: சூரியன் தான் இலக்கு, நாளை விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி - சி59 ராக்கெட் - ப்ரோபா-3 விண்கலம் ஆராயப்போவது என்ன?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
JEE Advanced 2025: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு எப்போது? தேதி அறிவித்த ஐஐடி கான்பூர்- இவர்களுக்கெல்லாம் அனுமதி இல்லை!
TN Ministers Delhi Visit :  “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TN Ministers Delhi Visit : “அடுத்தடுத்து நிர்மலா சீதாராமனை சந்தித்த தமிழக அமைச்சர்கள்” என்ன நடக்கிறது டெல்லியில் ?
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
TVK DMK VCK: கிள்ளி விட்ட விஜயின் தவெக.. பொங்கி எழுவாரா திருமா? திமுக மீது அட்டாக் வருமா? - கனிமொழி அஸ்திரம்
Fengal Cyclone Damage; கோரத்தாண்டவம் ஆடிய புயல் ; சின்னாபின்னமான ரயில் தண்டவாளங்கள்; மீண்டும் துவங்கிய ரயில் போக்குவரத்து
Fengal Cyclone Damage; கோரத்தாண்டவம் ஆடிய புயல் ; சின்னாபின்னமான ரயில் தண்டவாளங்கள்; மீண்டும் துவங்கிய ரயில் போக்குவரத்து
Embed widget