மேலும் அறிய

Pranavika CM Relief Fund | பட்டுப்புடவை வாங்க சேமித்த உண்டியல் காசுகளை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..

உண்டியலை உடைத்து அதில் சில்லறை காசுகளாகவும், பணமாகவும் சேர்த்து வைத்திருந்த 1516 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

கோவையை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி பட்டுப்புடவை வாங்க உண்டியலில் சேமித்த ஆயிரத்து 516 ரூபாயை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த நிதி உதவியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி AlcNo.117201000000070 IFSC-IOBA0001172 சென்னை கிளையில் செலுத்துமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதன் பேரில் பல்வேறு தரப்பினரும் தங்களான நிதியுதவியை அளித்து வருகின்றனர்.  இந்நிலையில் கோவையை சேர்ந்தா 7 வயது மாணவி ஒருவர் பட்டுப்புடவை வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

Pranavika CM Relief Fund | பட்டுப்புடவை வாங்க சேமித்த உண்டியல் காசுகளை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..

கோவை காந்தி மாநகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் டாட்டாபாத் பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது ஏழு வயது மகள் பிரணவிகா, தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா நிதியுதவி வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததை பிரணவிகா தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துள்ளார். இதையடுத்து பிரணவிகா பட்டு புடவை வாங்க உண்டியலில் தான் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது தந்தையுடன் ஐஓபி ஆர்.எஸ் புரம் கிளை வங்கிக்கு சென்றுள்ளார். வங்கி ஊழியர்கள் முன்பு உண்டியலை உடைத்து அதில் சில்லறை காசுகளாகவும், பணமாக சேர்த்து வைத்திருந்த ஆயிரத்து 516 ரூபாய் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

Pranavika CM Relief Fund | பட்டுப்புடவை வாங்க சேமித்த உண்டியல் காசுகளை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..

இது குறித்து பிரணவிகாவின் தந்தை பழனிச்சாமி கூறுகையில், ”நேற்று தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்த போது முதலமைச்சர் நிவாரண நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்த செய்தியை குடும்பத்துடன் பார்த்தோம். இது குறித்து பிரணவிகா என்னிடம் ஆர்வமாக கேட்டறிந்தார். இதையடுத்து நாங்கள் அவ்வப்போது கொடுக்கும் பணத்தை உண்டியலில் சேர்த்து வைக்கும் பழக்கம் கொண்ட பிரணவிகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டுமென தெரிவித்தார். இதையடுத்து பிரணவிகாவை வங்கிக்கு அழைத்து சென்று வங்கி ஊழியர்கள் முன் உண்டியல் உடைத்து சேமிப்பு பணமான ஆயிரத்து 516 ரூபாயை வங்கியில் செலுத்தினோம்” என்றார்

Pranavika CM Relief Fund | பட்டுப்புடவை வாங்க சேமித்த உண்டியல் காசுகளை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி..

சேமிப்பு பழக்கம் கொண்ட பிரணவிகா தனது தங்கைக்கும் தனக்கும் பட்டு புடவை வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். "கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது நான் 500 ரூபாயை முதலமைச்சரின் நிவரண நிதிக்கு அனுப்பி வைத்தேன். அதற்கான பாராட்டு சான்றிதழ் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்தது. அதனை அப்போது பிரணவிகாவிடம் காண்பித்து மகிழ்ந்தேன். அதுவும் நிவாரண நிதி வழங்க ஒரு உந்துகோலாக இருந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget