Tamilnadu Bronze In Shooting : தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்றது தமிழ்நாடு.. குவியும் பாராட்டுகள்..
டெல்லியில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
டெல்லியில் 64வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் இருந்தும் பலரும் இந்த துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்றனர். அவர்களில் ஷாட்கன் போட்டியை பயன்படுத்தி பங்கேற்கும் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரித்விராஜூம், நிவேதாவும் பங்கேற்றனர்.
இவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றனர். வெண்கலப் பதக்கம் வென்ற தொண்டைமான் பிரித்விராஜூக்கும், நிவேதா நெண்திரை சிகாமணிக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகனும், தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான டி.ஆர்.பி.ராஜா பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#64thNSC துப்பாக்கி சுடுதல்(Shotgun)போட்டியில் தமிழகத்தை சேர்ந்த அன்பு சகோதரர் பிரித்திவிராஜ் @tondaimanpr மற்றும் அன்பு சகோதரி நிவேதா @nive_siga கலப்பு இரட்டையர் சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர்🎉 #TeamTN #TNShooting @CMOTamilnadu https://t.co/gNcgck5RbX pic.twitter.com/4tGe7C5KEa
— Dr. T R B Rajaa (@TRBRajaa) December 10, 2021
அந்த பதிவில், 64வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அன்பு சகோதரர் பிரித்திவிராஜ் மற்றும் அன்பு சகோதரி நிவேதா கலப்பு இரட்டையர் சீனியர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் !
— Siva Vee Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) December 10, 2021
மேலும், தமிழ்நாடு இளைஞர் நலன் அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில், வெண்கலப் பதக்கம் வென்ற இருவருக்கும் வாழ்த்துக்கள் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Watch Video: ஆஷஸ் தொடரில் கிரவுண்டில் காதலிக்கு ப்ரோபோஸ் - அக்செப்ட் செய்து ‘லிப் டூ லிப்’ அடித்த காதலி..!
தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, விளையாட்டுத்துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு ஏபிபி நாடு செய்தி எதிரொலியாக தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 25 லட்சம் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Team India Record: சிங்கத்தை அதன் குகையிலேயே சாய்த்த விராட்டின் படை- 3 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் செய்த சம்பவம் !
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்