மேலும் அறிய

CM Stalin: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு...முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்...ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...!

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்தி செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, 

நிவாரணம்

”செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சித்தாமூர் குறுவட்டம், பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, க/பெ ராஜா (வயது 50). செல்வம், த/பெ செல்வம் (வயது 35), மாரியப்பன், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் குறுவட்டம் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன் (வயது 65) மற்றும் சந்திரா. க/பெ வள்ளியப்பன் (வயது 60) ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு வேதனையும். அதிர்ச்சியும் அடைந்தேன்.

இச்சம்பவம் நடைபெற்ற பகுதியைச் சேர்ந்த மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் சித்தாமூர் காவல்நிலைய உதவிஆய்வாளர் மோகனசுந்தரம் மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு
சிறப்பு சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் த.மோ அன்பரசன்  முன்னதாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

CM Stalin: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு...முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்...ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு...!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலோசனை

இதற்கு முன்னதாக விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கள்ளச்சாராயம் அருந்தி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

அதன்பின்பு,  அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், டிஜிபி சைலேந்திர பாபு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷரவண் குமார், கடலூர் ஆட்சியர் பாலசுப்பிரமணியம், செங்கல்பட்டு ஆட்சியர்  ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் படிக்க

Villupuram: 11 ஆக உயர்ந்த உயிரிழப்பு... கள்ளச்சாராயத்தால் அடுத்தடுத்து மரணம்... கண்காணிப்பு தீவிரம்

'தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசாக தான் திமுக உள்ளது' - அமைச்சர் பொன்முடி

TN 12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி; விண்ணப்பம், கட்டணம், ஹால்டிக்கெட்- முழுவிவரம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  கிழித்து தொங்கவிட்ட அமெரிக்கா..!
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - கிழித்து தொங்கவிட்ட அமெரிக்கா..!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"One Night Stand கலாச்சாரம்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  கிழித்து தொங்கவிட்ட அமெரிக்கா..!
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - கிழித்து தொங்கவிட்ட அமெரிக்கா..!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"One Night Stand கலாச்சாரம்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
அமைச்சர் எ.வ.வேலு சென்ற விமானம் அவசரம் அவசரமாக தரையிறக்கம் - என்னாச்சு?
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
TNPSC Group 4: இன்றே கடைசி; டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே மறந்துடாதீங்க.. உங்களுக்குத்தான் இந்த அறிவிப்பு!
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
AR Rahman Divorce: ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், மோகினிக்கும் தொடர்பா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Question Bank: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களே... பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Embed widget